எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சீனா, ஓமன், சீன தைபே ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது. பகல்காம் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் இந்தியா வருவதற்காக பாகிஸ்தான் சீனியர் அணி 18 வீரர்கள் மற்றும் 7 துணை ஊழியர்களை கொண்ட குழு விசாவுக்கு விண்ணப்பித்தது. இதனால் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அணி போட்டியில் இருந்து விலகி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசிய கோப்பையில் விளையாட இயலாது என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது. பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு தயாராக இருந்த போதிலும் அவர்கள் இந்தியாவுக்கு வர மறுத்து விட்டனர். பாகிஸ்தானுக்கு பதிலாக வங்காள தேசத்தை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
யு.எஸ் ஓபன்: பரிசுத்தொகை உயர்வு
டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாம் போட்டிகளாகும். ஆண்டு தோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கைப்பற்றினார். அல்காரசுக்கு (ஸ்பெயின்) பிரெஞ்சு ஓபன் பட்டம் கிடைத்தது. பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை மேடிசன் கெய்சும் (அமெரிக்கா), பிரெஞ்சு ஓபனை கோதா கவூப்பும் (அமெரிக்கா) விம்பிள்டன் பட்டத்தை இகாஸ்வியா டெக்கும் (போலந்து) கைப்பற்றினார்கள்.
ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 24-ந்தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. செப்டம்பர் 7-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.789 கோடியாக பரிசு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும். சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும். 2-வது இடத்துக்கு தலா ரூ.21.5 கோடி பரிசு தொகை கிடைக்கும்.
காலிறுதியில் இன்டர் மியாமி
எம்எல்எஸ் தொடரில் விளையாடும்போது மெஸ்ஸிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், லீக்ஸ் கோப்பையில் இன்டர் மியாமியின் போட்டியைப் பார்க்க மெஸ்ஸி பார்க்க வந்திருந்தார். கடந்த போட்டியில் இரண்டு அசிஸ்ட் செய்து அசத்திய ரோட்ரிகோ டி பால் தனது முதல் கோலை இன்டர் மியாமி அணிக்காக இந்தப் போட்டியில் 45ஆவது நிமிஷத்தில் அடித்தார்.
தொடர்ந்து லூயிஸ் சௌரஸ் 59-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்து தொப்பியை அணிந்து அதை தனது மகளுக்கு சமர்பித்தார். கிளப் யுனிவர்சிடாட் நேஷனல் அணி 39ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது. கடைசியில் இன்டர் மியாமி 3-1 என வென்றது. இந்தப் போட்டியில் 56 சதவிகித பந்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இன்டர் மியாமி 488 பாஸ்களை செய்து அசத்தியது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலமாக நடப்பு சாம்பியன் இன்டர் மியாமி அணி லீக்ஸ் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நவோமி இறுதி போட்டிக்கு தகுதி
கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட டென்னிஸ் போட்டியான கனடியன் ஓபனில் அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும் டென்மாா்க்கின் கிளாரா டௌசனும் மோதினார்கள். இந்தப் போட்டியில் ஒசாகா 6-2, 7-6 (9-7) என நேர்செட்களில் வென்றார். கனடியன் ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ஒசாகா பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் பிறந்த கனடாவில் வசிக்கும் 18 வயதான விக்டோரியோ போகோவுடன் 27 வயதான நவோமி ஒசாகா இறுதிப் போட்டியில் மோதுகிறார். இது குறித்து ஒசாகா, “போகோ விளையாடுவதை இன்று பார்த்தேன். எங்களுக்கு முன்னிலையில் தான் அவர்களது போட்டி நடைபெற்றது. போட்டியில் அழுத்தமே இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. மேட்ச் பாயின்டிலிருந்து போகோ திரும்ப வந்தது இந்த வயதில் மெச்சத்தக்கதாக இருந்தது” என்றார். 2021-க்குப் பிறகு டூர் அளவில் தனது முதல் பட்டத்தை வெல்ல ஒசாகா முனைப்புடன் இருக்கிறார்.
ஈட்டி எறிதல்: அன்னு ராணிக்கு தங்கம்
போலந்தில் நடைபெற்ற 8-ஆவது வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் தொடரில் தனது இரண்டாவது முயற்சியில் 62.59 மீட்டருக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றுள்ளார்.
32 வயதாகும் அன்னு ராணு இந்திய அளவில் அதிக தூரம் ஈட்டி எறிந்ததில் தேசிய சாதனை படைத்த வீராங்கனையாக இருக்கிறார். தேசிய அளவில் அன்னு ராணி 2022-இல் 63.82 மீட்டருக்கு ஈட்டி எறிந்ததே இதுவரை அவரது சிறந்த சாதனையாக இருக்கிறது. முதல்முயற்சியில் 60.95 மீட்டருக்கு எறிந்த அன்னு ராணி இரண்டாவது முயற்சியில் 62.59 மீட்டருக்கு எறிந்தார். கடைசியாக 6ஆவது முயற்சியிலும் 60.07 மீட்டர் எறிந்தார். புவனேஸ்வரில் வரும் ஆக.10ஆம் தேதி நடைபெறும் உலக தடகள கான்டினென்டல் டூர் வெண்கல பிரிவில் அன்னு ராணு கலந்துகொள்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-08-2025.
07 Aug 2025 -
மாநில கல்வி கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Aug 2025சென்னை, மாநில கல்வி கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
புதுச்சேரி நெசவு தொழிலாளர்களுக்கு 20% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ரங்கசாமி
07 Aug 2025புதுச்சேரி, தொழிலாளர்கள் நெசவுக் கூலி அகவிலைப்படியில் 20 சதவீதம் ஆகஸ்ட் முதல் உயர்த்தி தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
-
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குறித்து போலி செய்தி: தமிழக அரசு எச்சரிக்கை
07 Aug 2025சென்னை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குறித்து போலி செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
-
அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு இன்று விசாரணை
07 Aug 2025சென்னை, அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
-
தொடரும் எதிர்க்கட்சிகள் அமளி: பார்லி. இரு அவைகளும் ஒத்தி வைப்பு
07 Aug 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
-
கொடிக்கம்பம் விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Aug 2025மதுரை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கில், அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வ மாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டத
-
பிரதமர் மோடியுடன் கமல் எம்.பி. சந்திப்பு
07 Aug 2025புதுடில்லி, பிரதமர் மோடியை , ராஜ்யசபா எம்.பி.,யும், நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
-
பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு: ராகுல் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
07 Aug 2025புதுடெல்லி, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பா.ஜ.க. வாக்குகளை திருடுகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணை வெளியீடு
07 Aug 2025புதுடெல்லி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
-
சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் என்கவுன்ட்டர் நடந்தது ஏன்..? மாவட்ட எஸ்.பி விளக்கம்
07 Aug 2025உடுமலை, உடுமலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து மாவட்ட எஸ்.பி
-
உரிய காலத்துக்குள் அனுமதி வழங்காவிட்டால் திருவிழா செலவை போலீசாரே ஏற்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
07 Aug 2025சென்னை, 'கோவில் திருவிழாக்களுக்கு உரிய காலத்துக்குள் அனுமதி வழங்காவிட்டால் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வ
-
அன்புமணிக்கு என்ன குறை வைத்தோம்: ராமதாஸ் வேதனை
07 Aug 2025சென்னை, என் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறைவைத்தோம் என்று ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
-
சமூகத்துக்கு பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு கோரிக்கை
07 Aug 2025சென்னை, எம்.எஸ்.சுவாமிநாதனை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்: எதிர்த்த வழக்கு ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி
07 Aug 2025சென்னை, அரசு செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த ஐ.ஏ.எஸ்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி
07 Aug 2025புதுடெல்லி, தன்னை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்த உள் விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
-
அமெரிக்காவுக்கு வலிமையுடன் பதிலளிக்க வேண்டும்: பினராயி
07 Aug 2025திருவனந்தபுரம், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
பீகார் வாக்காளர்களின் விவரங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Aug 2025புதுடெல்லி, பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் ஷ்ரேயாஸ் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கிறார்
07 Aug 2025மும்பை: ஆசியக் கோப்பை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள
-
சட்டம் ஒழுங்கு குறித்து இ.பி.எஸ்.-ன் சான்றிதழ் எங்களுக்கு தேவை இல்லை: அமைச்சர் ரகுபதி
07 Aug 2025புதுக்கோட்டை, சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு தேவை இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
வெள்ளம், நிலச்சரிவு: இமாசல்லில் பலி 199 ஆக உயர்வு
07 Aug 2025சிம்லா, இமாசல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 199 பேர் பலியாகியுள்ளனர்.
-
கானாவில் ஹெலிகாப்டர் விபத்து: 2 அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி
07 Aug 2025கானா: மேற்கு ஆப்பரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்தில் 2 மந்திரிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
-
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
07 Aug 2025சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆடித்தபசு திருவிழா கடந்த 28
-
தமிழகத்திற்கான கல்வி கொள்கை: இன்று வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Aug 2025சென்னை: தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 8) வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பும்ராவின் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்: சச்சின்
07 Aug 2025மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.