முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தராகண்ட் வெள்ளம்: 70 பேர் மீட்பு; 50 பேர் மாயம்

வியாழக்கிழமை, 7 ஆகஸ்ட் 2025      இந்தியா
Uttarakhand 2025-06-29

Source: provided

டேராடூன்: திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் உத்தரகாசியில் மீட்புப் பணிகள் நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், இதுவரை 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டம் தாராலி கிராமத்தில் ஆகஸ்ட் 5 அன்று பகல் 1:45 மணிக்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், மலை உச்சியில் இருந்து சேறு, சகதியுடன் கரை புரண்டு வந்த வெள்ளம் குறுக்கே இருந்த வீடுகள், ஹோட்டல்கள், விடுதிகள், கட்டடங்கள் என அனைத்தையும் வாரி சுருட்டி சென்றது.இதில் ஏராளமான கட்டடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். 

இதனால், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளில் 3வது நாளாக மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பேசினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்த 65 பேர் நேற்று இங்கிருந்து 432 கி.மீ தொலைவில் உள்ள மாட்லி நகரத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் மூன்றாவது நாளாகத் தொடரும் நிலையில், இதுவரை 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து