முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்.17-ல் தர்மபுரியில் தொடங்குகிறார்: எடப்பாடி பழனிசாமியின் 5-வது கட்ட பிரசார பயணம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2025      தமிழகம்
EPS 2025-08-25

Source: provided

சென்னை : வருகிற 17-தேதி முதல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5-ம் கட்ட சுற்றுப் பயணத்தை தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தொடங்குகிறார். 26-ம் தேதி அன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தனது 5-ம் கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி 23-ம் தேதி தஞ்சையில் முடித்தார். இதன் பின்னர், 2 மற்றும் 3-ம் கட்ட பயணங்களையும் முடித்த அவர் கடந்த 1-ம் தேதி 4-ம் கட்ட பிரசாரத்தை மதுரையில் தொடங்கி மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம் வருகிற 13-ம் தேதி கோவையில் முடிவடைகிறது.

இந்த நிலையில் வருகிற 17-தேதி முதல் எடப்பாடி பழனிசாமி 5-ம் கட்ட சுற்றுப் பயணத்தை தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தொடங்குகிறார். அன்றைய தினம் பாப்பி ரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளில் பேசும் அவர் 18-ம்  தேதி பாலக்கோடு, பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகளிலும், 19-ம் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

20-ம் தேதி அன்று நாமக்கல், பரமத்திவேலூர், 21-ம் தேதி திருச்செங்கோடு, குமார பாளையம் தொகுதிகளிலும் பேசுகிறார். 22-ம் தேதி அன்று ஓய்வெடுக்கும் எடப்பாடி பழனிசாமி 23-ம் தேதி குன்னூர், ஊட்டி சட்டமன்ற தொகுதிகளிலும் 24-ம் தேதி கூடலூர் தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். 25-ம் தேதி வேடசந்தூர், கரூர் தொகுதிகளில் பேசும் எடப்பாடி பழனிசாமி 26-ம் தேதி அன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தனது 5-ம் கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து