முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழையால் கடும் வெள்ள பாதிப்பு: பஞ்சாப், இமாசல பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2025      இந்தியா
Modi 2024-10-24

Source: provided

சண்டிகார் : வடமாநிலங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

வடமாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பரவலாக பருவமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், பஞ்சாப்பில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாநிலத்தின் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்த தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 46 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். 1.75 லட்சம் ஹெக்டேருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை மற்றும் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பஞ்சாப்பில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். இதனை பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் சுனில் ஜாக்கர் தெரிவித்துள்ளார். அவர் தனிப்பட்ட முறையில் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்வதுடன், கள நிலவரம் பற்றி அறிந்து அதிகபட்ச உதவிகளை வழங்குவார் என்றும் ஜாக்கர் கூறினார். 

இதேபோன்று பஞ்சாப்புக்கு 2 மத்தியக்குழுவும் வர இருக்கின்றனர் என்றும், அவர்கள் மாநிலத்தில் வெள்ள நிலவரம் பற்றி ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றும் ஜாக்கர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் போன்று இமாசல பிரதேசத்திலும் வெள்ளம் கடுமையாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இமாசல பிரதேசத்தில், பருவமழையையொட்டி கடந்த 2 மாதங்களாக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்றவை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புக்கு 366 பேர் உயிரிழந்து உள்ளனர். இதேபோன்று, அரசு சொத்துகளில் ரூ.4,006 கோடி மற்றும் தனியார் சொத்துகளில் ரூ.67 கோடியும் பாதிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் ரூ.4,079 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 3,390 வீடுகள், 40 குடிசைகளும் சேதமடைந்து உள்ளன. 1,464 கால்நடைகளும், 26,955 பண்ணை பறவைகளும் உயிரிழந்து உள்ளன. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று இமாசல பிரதேசத்திற்கும் நேரில் சென்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து