முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் நேரில் ஆய்வு நடத்தினர்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, இன்று (25.10.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, ராயபுரம் மண்டலம், வார்டு-54, அண்ணா பிள்ளை தெரு, வுட் வார்ப் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்ல ஏதுவாக மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கால்வாயில் அகற்றப்படும் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர், வுட் வார்ப் பகுதிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக பார்வையிட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கலந்துரையாடி தேவைகள் குறித்து கேட்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, மேயர் பிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க வடகிழக்குப பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த தீபாவளி அன்றும், அதற்கு மறுநாளும் 6 சென்டிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, மண்டலம் வாரியாக ஒவ்வொரு அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்தந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கல்யாணபுரம், கல்யாணபுரம் பள்ளம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆய்வினை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றைக்கு மூன்றாவது நாளாக இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதி மண்டலம்-5க்குட்பட்ட மிகவும் தாழ்வான பகுதியாக இருக்கின்றது. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் இங்கு வசிக்கிறார்கள். இந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடு வாரியாக சென்று, அவர்களின் கோரிக்கை என்னவென்று கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைக்கு தீர்வினை காணும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதி முற்றிலும் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்புகளாக இருக்கக்கூடியது. இந்த கால்வாயில் ஓட்டேரி நல்லா இணைகிறது. அம்பத்தூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தண்ணீர் அனைத்தும் ஓட்டேரி நல்லா கால்வாய் மூலமாக பக்கிங்ஹாம் கால்வாயில் இணைகிறது. கிட்டத்தட்ட 1.20 கிலோமீட்டர் நீளத்திற்கு மாநகராட்சியின் சார்பாக இந்த கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சரால் ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், வீராங்கல் ஓடை, ஓட்டேரி ஆகியவை நீர்வள ஆதாரத்துறை மூலம் பராமரிப்பிற்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் வகைபாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பாக இந்த கால்வாய் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வரக்கூடிய அடுத்த ஓரிரு நாட்களில் கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, ஆதலால் முன்னேற்பாடாக மாநகராட்சியின் சார்பாக இந்த கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. சென்னை மாநகரில் மழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு மேயர் பதில்:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகின்ற போது சாலைகளில் இந்த குழிகள் ஏற்படுகின்றது. ஒவ்வொரு வார்டு வாரியாக இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து, எத்தனை இடத்தில் குழிகள் இருந்தாலும் உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்து சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழை முடிந்த பிறகு சாலை அமைக்கும் பணிகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும்.  கிட்டத்தட்ட 2,000 பகுதிகளில் உள்ள சாலைகளில் குழிகள் கண்டறியப்பட்டுள்ளது. வார்டு வாரியாக அந்தந்த நாட்களிலே அவற்றை சீர்செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 206 பகுதிகளில் தாழ்வான இடமாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடங்களில் மழைநீரினை வெளியேற்றுவதற்காக 100 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அந்தந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், மாமன்ற உறுப்பினர்கள் மழை அதிகம் இருக்கும் என்ற கணிக்கும் பொழுதெல்லாம் முன்னதாகவே அந்த பகுதி மக்களிடம் தெரிவித்து, ஆறுகள் ஓரம் இருக்கக் கூடியவர்களை சமுதாய நலக்கூடங்களிலோ அல்லது பள்ளிக்கூடங்களிலோ தங்க வைக்க மாற்று இடம் ஏற்பாடு செய்து இருக்கின்றோம். நிவாரண மையங்களில் சமுதாய நலக்கூடமோ அல்லது பள்ளிக்கூடங்களிலோ தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான பாய், தலையணை, அரிசி, போர்வை, அவர்களுக்கு தேவையான உணவு அனைத்தும் மாநகராட்சியின் சார்பாக வழங்கப்படும். கூடுதலாக இந்த மையங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து மழைநீர் வடிகால் பணிகள் கட்டும் பணிகள் முக்கியமான பணிகளாக தொடர்ந்து நடைபெற்று, சிறப்பாக பணிகள் முடிவுற்றுள்ளது. கடந்த ஆண்டும் குறிப்பிட்ட பகுதிகளில் சாலையில் நீர் தேங்குகின்றது என்ற தெரிவித்திருந்தார்கள். இரவு நேரத்தில் நீர் தேங்கி இருந்தாலும், காலையிலே மாநகராட்சி ஊழியர்களை கொண்டு அந்த நீர் வெளியேற்றப்பட்டது. இதே சென்னை மாநகராட்சியில் இதற்கு முன்பாக 10 நாட்கள் 15 நாட்கள் மழைநீர் தேக்கம் ஏற்பட்டிருந்த சூழல் இருந்த நிலையில், உடனடியாக மழைநீரை வெளியேற்றுகின்ற சூழல் மற்றும் உட்கட்டமைப்புகள் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் பேருந்து சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் இந்த கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை ஒரு (Unplanned City), நிறைய கால்வாய்கள் இருக்கக்கூடிய பகுதி, பொதுமக்களும் நீர்நிலைப் பகுதிகளில் நிறைய ஆக்கிரமிப்புகளில் இருக்கின்றார்கள். அவர்கள் இருக்கக்கூடிய சூழலில் இன்றைக்கு கிட்டத்தட்ட 15 சென்டிமீட்டர் வரைக்கும் மழை பொழிந்தாலும் அவை உடனே வெளியேறுவதற்கான சூழல் நிலவுகிறது. நிஜாம் புயல் போன்று 40 சென்டிமீட்டர் அல்லது அதற்குமேல் மழை பொழிந்தால், மழைநீரினை வெளியேற்றுவதற்காக மாநகராட்சியின் சார்பில் பல இடங்களில் மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலமாக மழைநீரினை உடனடியாக வெளியேற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவர் பி. ஶ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து