முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளரானார் சங்ககாரா

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      விளையாட்டு
Sangakara 2025-11-17

Source: provided

ராஜஸ்தான் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்ககாராவை மீண்டும் ஒரு முறை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

மீண்டும் நியமனம்...

கடந்த ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வந்தார். பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகியதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாக இயக்குநராக குமார் சங்ககாரா செயல்பட்டு வருகிறார். அவர் கடந்த 2021 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். தற்போது மீண்டும் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் செயல்படவுள்ளார். 

4 வெற்றிகளை...

இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் குமார் சங்ககாரா, அடுத்த ஐ.பி.எல். சீசனில் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளார் எனப் பதிவிடப்பட்டுள்ளது. கடந்த ஐ.பி.எல். சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. 14 போட்டிகளில் அந்த அணி வெறும் 4 வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடம் பிடித்தது. அண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து