எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை போலீசார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டவர்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணையை ஆய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சி.பி.ஐ. டி.ஐ.ஜி. அதுல்குமார் தாகூர் வருகை தந்தார். பின்னர் அவர் சி.பி.ஐ. விசாரணை செய்த ஆவணங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து மதியம் 3.20 மணியளவில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விளக்கி கூறினர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றியுள்ள பல்வேறு இடங்களை சுமார் 30 நிமிடங்கள் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சுமித் சரண், சோனல் வி. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய சிறப்புக்குழு கரூருக்கு வருகை தந்தனர். இதனிடையே கரூர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள், இதர பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் ஆகியோர் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மேற்பார்வை குழுவினரிடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மனுக்கள் அளிக்கலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. சிறப்புக்குழு விசாரணை சரியான திசையில் பயணித்ததால் அதற்கும், அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணைக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் த.வெ.க. தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, “அரசின் விரிவான வாதங்களை கேட்காமல் சி.பி.ஐ.-க்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அரசு அதிகாரிகள் பேட்டியளித்ததை காரணம் காட்டி சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட முடியாது. சட்டம்-ஒழுங்கு மாநில பட்டியலில் இருப்பதால், கூட்டநெரிசல் குறித்து மக்களுக்கு விளக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு” என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தமிழக சட்டசபை தேர்தல் தேதி வரும் 15ம் தேதி வெளியாகிறது
09 Mar 2026சென்னை, வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
09 Mar 2026சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
09 Mar 2026சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர், அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் : திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு
09 Mar 2026தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேசினார்.
-
மேற்கு ஆசிய போர் பதற்றம்: பாராளுமன்ற விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026புதுடெல்லி, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி எத
-
பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
09 Mar 2026புதுடெல்லி, குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன்
09 Mar 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சி.பி.ஐ.
-
திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் என்.டி.ஏ சார்பில் பொதுக்கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
10 Mar 2026திருச்சி, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் இன்று (புதன் கிழமை) மாலை நடக்கிறது.
-
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு
10 Mar 2026கொழும்பு, இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
10 Mar 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையானது.
-
சர்வதேச விமான நிலையமாக மாறும் மதுரை விமான நிலையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
10 Mar 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Mar 2026சென்னை, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய
-
நாட்டில் 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு: எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை
10 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் பதற்றத்தால் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்கவும், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக
-
நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும்: பார்லி., மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
10 Mar 2026சென்னை, நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை அடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளிய
-
ராமேஸ்வரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட தமிழ்நாட்டிற்கு 5 புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம் : பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்
10 Mar 2026திருச்சி, நெல்லை-மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
-
கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை: மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
10 Mar 2026சென்னை, கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை மற்றும் மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம்: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை
10 Mar 2026சென்னை, மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.
-
தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது: தனித்தேர்வர்கள் உள்பட 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
10 Mar 2026சென்னை, தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப
-
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி
10 Mar 2026கொல்கத்தா, தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் மீது 20 மடங்கு கூடுதலாக தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப்
10 Mar 2026வாஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால் இதுவரை தாக்கப்பட்டதைவிட ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்
-
தமிழ்நாட்டில் உரிய நேரத்தில் கேஸ் சிலிண்டர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
10 Mar 2026சென்னை, தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை
10 Mar 2026லாகூர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை: பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
10 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட
-
ஈரான் போர் குறித்து ட்ரம்ப் - புதின் ஆலோசனை
10 Mar 2026மாஸ்கோ, ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
-
த.வெ.க. சார்பில் விருப்பமனு: 60 பேரிடம் விஜய் நேர்காணல்
10 Mar 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட த.வெ.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த 60 பேரிம் விஜய் நேற்று நேர்காணல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


