முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

33 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தி.மலையில் மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா : துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      தமிழகம்
DCM-1 2025-12-05

Source: provided

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்று சூழல் சுற்றுலா பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவானது, எடப்பாளையம் ஏரியை தூர்வாரி, நிலத்தடி நீர் உயரும் வகையில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏரியின் உபரிநீர் வெளியேறும் சிறிய பாலத்தில் வில்நாண் வடிவில் வண்ண மின்விளக்குகளால் ஒளிரக்கூடிய வகையிலான அமைப்பு மக்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழலை கருத்தில்கொண்டு மண்அரிப்பு மற்றும் சரிவுகளை தடுக்க ஏரியின் கரைகள் இயற்கை முறையில் வெட்டிவேர் பயன்படுத்தி நவீன முறையில் வலுபடுத்தப்பட்டுள்ளது.

இப்பூங்காவில் அக்குபிரஷர் தன்மையுடைய நடைபாதை 2.00 கி.மீ. துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் அணுகக்கூடிய வகையில் திறந்தவெளி உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரிக்கரையைச் சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் பல வகையான நாட்டு மரக்கன்றுகள் மற்றும் மலர் செடிகள் நடப்பட்டுள்ளதுடன், ஏரிக்கரையை சுற்றி நவீனமுறையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதை முழுவதும் மெல்லிய இசையுடன்  மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ஒலிபெருக்கிகளும், ஓய்வெடுக்க அங்காங்கே நவீன நிழற்குடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நடைபாதையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளதுடன், பூங்காவிற்கு வரும் மக்களின் வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ப.செல்வராஜ், சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து