முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

117 நாட்களுக்கு பாசனத்திற்காக நம்பியாறு அணையில் இருந்து நீரை திறந்துவிட அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, நம்பியாறு அணையில் இருந்து 117 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கோட்டைக்கருங்குளம் கிராமத்தில் நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 05.12.2025 முதல் 31.03.2026 வரை 117 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பிசான பருவ சாகுபடிக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் ராதாபுரம் வட்டத்தில் உள்ள கோட்டைக்கருங்குளம், உறுமன்குளம், ராதாபுரம், கரைசுத்துப்புதூர், கஸ்தூரிரெங்கபுரம், குமாரபுரம், முதுமொத்தான்மொழி ஆகிய கிராமங்களில் உள்ள 1,744.55 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து