முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2026      இந்தியா
Vijay 2023-12-30

புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வழக்கில் அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

கரூரில் கடந்த செப். 27-ம் தேதி விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணைக்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த ஜன. 12-ம் தேதி நேரில் ஆஜராகும்படி த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. முதல்முறையாக சம்மன் அனுப்பியது. அதைத்தொடர்ந்து விஜய் டெல்லியில் நேரில் ஆஜரான நிலையில், அவரிடம் தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பொங்கல் பண்டிகை காரணமாக, விஜய்யின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை ஒத்திவைத்தனர். இதைத்தொடர்ந்து, விசாரணைக்கு நேற்று ஆஜராக விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை ஏற்று விஜய் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.

அப்போது விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதாக சொல்லப்படுகிறது. அதாவது: கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் விஜய் தொடர்ந்து பிரசாரம் செய்தது ஏன்? எப்போது பேச்சை முடித்தீர்கள்? எப்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றீர்கள்? அனுமதிக்கப்பட்டதை விட கூட்டம் அதிகமாக வந்தது எப்படி? அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததை நிர்வாகிகள் கவனிக்கவில்லையா? தண்ணீர் பாட்டிலை வீசிய போது கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா? வாகனத்தில் ஏறி நின்ற போது கீழே நடப்பதை பார்க்கவில்லையா? கண் எதிரே கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா? அவ்வளவு நெரிசலிலும் வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை சி.பி.ஐ. எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு, விஜய் பதிலளித்ததாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான கேள்விகளுக்கு விஜய் ஓரிரு வரிகளில் பதில் அளித்ததாகவும், சில கேள்விகளுக்கு அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் அளித்த சில பதில்களுக்கு சி.பி.ஐ. தரப்பில் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், நேற்றுடன் விஜய்யிடம் விசாரணை முடிவு பெறாது எனத் தெரிகின்றது. இதனிடையே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரி 2-வது வாரத்தில் இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை சுப்ரீம் கோரிட்டில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இந்த குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரையும் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து