முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழப்பு 21 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2026      உலகம்

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இதனால், அந்த அதிவிரைவு ரயில், அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்றது. அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த, அரசால் நடத்தப்படும் ரயில் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பயணிகள், ரயில் பெட்டிகளுக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேறும்போது, சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

இந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. ரயில் தடம் புரண்டபோது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று இருந்தது என சிலர் கூறினர். ரயிலுக்குள் புகையும் பரவியுள்ளது என சில பயணிகள் தெரிவித்தனர். அதிவிரைவு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்தில், பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 100 பேர் காயம் அடைந்தனர். ஒரு ரயிலின் டிரைவர் பலியாகி உள்ளார். இதுபற்றி ஸ்பெயின் போக்குவரத்து மந்திரி ஆஸ்கார் புவென்ட் கூறும்போது, ரயில் விபத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அரசு ரயிலின் முதல் 2 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டு உள்ளன என்றார்.

பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் விபத்துக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் சம்பவத்திற்கு ஆழ்ந்த அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து