முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2026      தமிழகம்
CM-3-2026-01-19

செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில் மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமையவுள்ள நீர்த்தேக்க திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை பெருநகரில் மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகத்திற்காக, சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம், சோழவரம், தேர்வாய் கண்டிகை, புழல், பூண்டி ஏரிகளில் இருந்தும், கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், பெருமளவு குடிநீர் பெறப்படுகிறது. இதுதவிர, கடல்நீரில் இருந்தும் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.

இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே, கோவளம் உபவடி நிலத்தில் சுமார் 5,161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342.6 கோடியில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில், 6-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். ஆனால், கோவளத்தை தவிர்த்து மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியில் பக்கிங்காம் கால்வாய் (உப வடிநிலத்தில்) புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக தொடர்ந்து ஆய்வும் மேற்கொண்டனர்.

இதன்படி, மாமல்லபுரம் அருகில் நெம்மேலியில் ரூ.342.6 கோடி மதிப்பில், புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக, பகிங்ஹாம் கால்வாய் பகுதியில், 5,161 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காலை அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் அதுதொடர்பான பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து