முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2026      தமிழகம்
Vijay 2024-03-21

சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம். இன்று நடைபெறவுள்ள தேர்தல் அறிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள செங்கோட்டையன் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியை இறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில் த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள 12 உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இல்லாத மக்கள் குறைகளை தீர்க்கும் வழிகள், வளர்ச்சி திட்டங்கள் இடம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை வழங்குகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து