முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2026      தமிழகம்      அரசியல்
Cong 2024-03-18

சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பட்டியல் வெளியிடப்படவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னை கிழக்கு கராத்தே ஆர்.செல்வம், மத்திய சென்னை மேற்கு கோபி, வட சென்னை கிழக்கு மதர்மா கனி, வட சென்னை மேற்கு தில்லிபாபு, தென் சென்னை மத்தி ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு விஜயசேகர், தென் சென்னை மேற்கு திலகர், செங்கல்பட்டு வடக்கு செந்தில்குமார், செங்கல்பட்டு தெற்கு பிரபு ஆகியோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர்களுக்கான பட்டியல் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து