முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2026      தமிழகம்
Admk-1-2026-01-20

சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கயிருந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கவில்லை என்று தெரிவித்து, கவர்னர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து, கவர்னர் உரையை அவர் படித்ததாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, சட்டப்பேரவை விதி 17ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி தமிழக அரசு தயாரித்த உரையை, சட்டப்பேரவையில் கவர்னர் படிக்காமல் சென்றததை இப்பேரவை ஏற்கவில்லை. கணினியில் பதிவேற்றம் செய்துள்ள கவர்னர் உரையின் ஆங்கில மொழியாக்கம் கவர்னர் படிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை 17ன் கீழ் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். இந்த நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தெரிவித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. கவர்னர் ஆர். என். ரவிக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து