எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சட்டசபையில் சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகையாகப் பெறுகின்றனர். இத்திட்டத்திற்காக, இதுவரை ரூ.33,464 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி வங்கிக் கடனாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆ
திதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த இதுவரை 3 லட்சம் இலவச வீட்டுமனை இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 1.83 லட்சம் புதிய பாசன மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், கட்டணமில்லா வேளாண் மின்சாரம் வழங்கிட கடந்த 5 ஆண்டுகளில் ரூ.26,723 கோடி செலவிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அரசு செயல்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக ஒரு முறை பங்களிப்பாக ரூ.13 ஆயிரம் கோடியும், ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூ.11 ஆயிரம் கோடி நிதியையும் தமிழ்நாடு அரசு வழங்கும். அதுபோன்று சிறப்புக் காலமுறை ஊதிய முறையில் பணியாற்றி வரும் பணியாளர்களின் சிறப்பு ஓய்வூதியம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து உரிய ஆணைகளை விரைவில் வெளியிடும். மத்திய அரசு எதிர்மறை மனப்பான்மையுடன் மாநில அரசை அணுகி வருவதால், மாநில அரசிற்கு உரிய திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவது கவலைக்குரியது.
தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்கு, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை மத்திய அரசு விதித்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெருந்தடைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அத்திட்டங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக உள்ளது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ஆண்டுப் பணித் திட்டத்திற்கு, திட்ட ஒப்பளிப்பு வாரியம் அனுமதித்த தொகையை மத்திய அரசு முழுமையாக விடுவிக்காமல் உள்ளது. ரூ.3,548 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காததன் காரணமாக, அத்திட்டத்திற்குரிய முழுச் செலவையும் மாநில அரசே ஏற்றுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களின் சீரமைப்பு காரணமாக மாநிலங்கள் பெருமளவிலான வரி வருவாய் இழப்பினைச் சந்தித்து வரும் வேளையில், மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கூடிய வரி வருவாயை மடைமாற்றும் வகையில் மத்திய அரசானது மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை விதிப்பதைத் தவிர்த்திட நமது அரசு வலியுறுத்துகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மேலும் கூடுதல் நிதி ஆதாரங்களை ஒதுக்கி அதை வெற்றிகரமாக செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான பேச்சு வார்த்தை நடத்திட கூட்டுப் பணிக் குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையான தீர்வை எட்டிடவும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறது.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது வருத்தமளிக்கிறது. கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகையே உள்ளதால், இத்திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தகுதியின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட நகரங்களுடன் ஒப்பிடும்போது, அவற்றைவிடப் பெரிய நகரங்களான கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை நிராகரிப்பதன் மூலம் மெட்ரோ ரெயில் திட்டத்திலும் தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகும் நிலையே காணப்படுகிறது.
மத்திய அரசின் கல்விக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட மும்மொழிப் பாடத்திட்டத்தை இந்த அரசு ஏற்கவில்லை. 1968-ம் ஆண்டு அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கல்வி திட்டத்தினை நாம் நமது இரு கண்களைப் போலக் காத்து வருகிறோம். நம் உயிரோடும், உணர்வோடும் கலந்துள்ள செந்தமிழைக் காப்பதில் சமரசம் என்றே பேச்சிற்கே இடமில்லை. எச்சூழ்நிலையிலும் இக்கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் இந்த அரசு ஏற்காது. தற்போது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த நடவடிக்கையை மறைமுக இந்தி மொழித் திணிப்பாக மட்டுமே இவ்வரசு கருதுவதோடு, இதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசை இவ்வரசு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.



