எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Monday, August 21, 2023 to Sunday, August 27, 2023
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- இந்த வாரம் எதிர்பாராத தனவரவு மூலம் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். உங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். புதிய முதலீடுகளால் வியாபாரத்தில் ஏற்றம் காணலாம். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.
பரணி -- இந்த வாரம் வெளியூர்ப் பயணங்கள் இலாபகரமாக அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். அரசு பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசு பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற முயற்சிப்பர். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாக கழியும். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருட்களின் விற்பனை சூடுபிடிக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். போட்டியாளர்களை காட்டிலும் அரிய சாதனைகள் புரிவார்கள். பெண்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீண் அலைச்சல்கள், வெட்டிச் செலவுகளும் தவிர்க்க முடியாத தாகும். பூஜா வழிபாடுகளால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் பயணங்கள் மூலம் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண முயல்வீர்கள். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். உறவுகளுடன் சென்று மகான்கள் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால்மனமகிழ்ச்சி ஏற்படும். தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். பொறாமை காரணமாக நண்பர்களே பகைவர் ஆவர். சுறுசுறுப்பற்ற நிலையில் காரியத் தடைகள் ஏற்படும். சிலருக்குத் தோல் உபாதைகள் ஏற்படலாம்.
ரோகிணி – இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். பயணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். உடன் பிறப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். மேடைப் பேச்சாளர்கள் உங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவர்.
மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை காண்பீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர் கள், நன்மைகளும் ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைய சுக சௌகரியங்களை விட்டுக் கொடுப்பார்கள். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும். தொலை தூரச் செய்திகள் காதில் தேன் போல் வந்து பாயும். சிலருக்கு தொழில் முன்னேற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்.
மிதுனம்
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். அரசு அதிகாரிகளால் சிலருக்குத் இடையூறுகள் ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும். எதிரிகளின் பணமும் வந்து சேரும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் குழந்தைகள் மூலம் தொல்லை, அவமானங்கள் ஏற்படலாம். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு அருந்த முடியாது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள், வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். சிலருக்குப் பயணங்களில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம்.
திருவாதிரை – இந்த வாரம் தாய் வழி உறவுகள் மூலம் உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பலன்களை அடைவார்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம். கவனம் தேவை. வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். கற்பனை வளம் பெருகும். நீங்கள் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பார்கள்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் இனிய வாரம். மனமகிழ்ச்சி, பகையை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும். வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். வியாபார நிமித்தமாக தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவி கள் கிடைக்கும். தொழில் விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பார்கள்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் புது புது முயற்சியில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். வியாபாரப் பயணங்கள் மூலம் வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவார்கள். உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.. புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக ஆதாயம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படுவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர். வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
அஸ்தம் – இந்த வாரம் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகளால் வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். உங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபா களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்கள் அடைவர். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனு செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். உறவுகளை அனுசரித்து சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும்.
திருவோணம்- இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மாணவர்கள் தங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும். வேலையில் சிரத்தையும், கடின உழைப்பு தொழிலில் நல்ல முன்னேற்றங்களை தரும். அப்போதுதான் உங்கள் கஜானாவும் பணத்தால் நிரம்பும்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகள் காரணமாக மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். இருப்பினும், சினத்தை அடக்கி உடன் பிறப்புகளுடன் ஒத்துச் செல்வது நல்லது. இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும்.
பூசம் -- இந்த வாரம் உங்களுக்கு தெய்வ சிந்தனைகள் மூலம் மனதில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களின் கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும். எனவே, ஆசிரியர்கள் ஆலோசனைப்படி படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம், சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை, ஆகியவை ஏற்படும். எனவே துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள்.
ஆயில்யம் – இந்த வாரம் சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். சந்ததி விருத்தி ஏற்படும். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும் அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்கு வன்மை ஓங்கும். புதிய வியாபார யுக்திகளால் அதிக இலாபம் அடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் தனவரவு கூடும். உங்கள் தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். பெண்களின் அறிவுத்திறன் கூடும். பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும்.
பூரம் – இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். உங்கள் உடலில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். நல்லோர் சேர்க்கையால் மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். புதிய முயற்சிகள் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். நல்ல பல கருத்துக்களை கேட்பதின் மூலம் உங்களுக்கு ஞான தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக வருவாய் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வாடிக்கையாளரிடம் நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் உங்களுக்கு ஓரளவு பணவரவு இருக்கும். சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்கள் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். தொலைதூர செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தானதர்மங்கள் செய்வார்கள்.
சுவாதி – இந்த வாரம் ஆரவாரம் மிக்க வாரம். விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதை கழிப்பார்கள். சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடம் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி திக்கை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களை பரிசாக அறிவித்து வியாபாரிகள் உங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் உங்களுக்கு திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்து விடுவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும். அரசு பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். மாணவர்கள் அன்றன்றைக்கு உங்கள் பாடங்களை அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும் .விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும்.
உத்திரட்டாதி- இந்த வாரம் வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான பணச் செலவுகள் ஏற்படும் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசு பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரேவதி- இந்த வாரம் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கு நல்லது. உடல் உபாதைகள் காரணமாகத் தொழிலில் உற்பத்தி பாதிப்புகள் ஏற்படலாம். ஆயினும், எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகள் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். தீய குணம் உள்ள நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது.
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்கள் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். உங்கள் சகோதரனின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும். மேலதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம்.
பூராடம் – இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புகள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்பு குறைவால், உற்பத்தி திறன் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால்தான் அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகள் மூலம் நன்மைகள் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்பு தேவை. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
அனுஷம் – இந்த வாரம் ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புகளில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
கேட்டை – இந்த வாரம் உடன்பிறப்புகளிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவி கள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக் குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.
சதயம்- இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேற்றுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அதன் காரணமாக குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல் ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றி கிடைக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இஸ்ரேல் - ஈரான் மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்
13 Jun 2025புதுடில்லி : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழலை தவிர்க்க, இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
-
உயிர்வாழ்விற்கான போராட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு
13 Jun 2025ஜெருசலேம் : எங்கள் உயிர்வாழ்விற்கான போராட்டம் என ஈரான் மீது தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-06-2025
13 Jun 2025 -
மின்வாரியத்தில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களுக்கு தேர்வு : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
13 Jun 2025சென்னை : மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு நடத்தப்பட இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி.
-
மலைப்பகுதியில் சாரல் மழை: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
13 Jun 2025தென்காசி, குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் தொடர்ந்து ஒரு வாரமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
-
உயிர் பிழைத்தது எப்படி? - விமான விபத்தில் தப்பித்த விஷ்வாஸ் குமார் பேட்டி
13 Jun 2025அகமதாபாத் : உயிர் தப்பியது எப்படி என விமான விபத்தில் தப்பித்த ஒற்றை நபரான விஸ்வாஸ் குமார் பேட்டியளித்தார்.
-
கீழடி அகழாய்வில் மேலும் சான்றுகள் கேட்கிறார்கள்: தமிழர்களின் வரலாற்றை மறைத்து அழிக்க முயற்சி : மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
13 Jun 2025சென்னை : கீழடி அகழாய்வில் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள், இது தொடர்பாக மேலும் சான்றுகள் தேவை என்று தமிழர்களின
-
அகமதாபாத் விமான விபத்து: 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
13 Jun 2025அகமதாபாத் : ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
-
கடவுள் தான் காப்பாற்றினார்: விமானத்தை தவறவிட்ட குஜராத் பெண் நெகிழ்ச்சி
13 Jun 2025அகமதாபாத் : விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி சவுகான், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார்.
-
எட்டயபுரம் அருகே கார் விபத்து: 4 பேர் மரணம்; நீதிபதி படுகாயம்
13 Jun 2025கோவில்பட்டி : எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
ஒரு பவுன் ரூ.74,360-க்கு விற்பனை: மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
13 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 13) பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,360-க்கு விற்பனையானது.
-
நீலகிரிக்கு ரெட் அலர்ட்: 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
13 Jun 2025சென்னை : நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான
-
கருப்பு பட்டையுடன் வீரர்கள்
13 Jun 2025குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளா
-
அகமதாபாத்தில் பலியானவர்களுக்கு த.வெ.க. சார்பில் மவுன அஞ்சலி
13 Jun 2025மாமல்லபுரம் : அகமதாபாத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
ஸ்ரீரங்கம் தொகுதியில் விஜய் போட்டி? - திருச்சி த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு
13 Jun 2025திருச்சி : விஜய் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
-
விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
13 Jun 2025அகமதாபாத் : அகமதாபாத் விமான விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
என்னுடைய மூச்சுக்காற்று இருக்கும் வரை நானே தலைவர்: ராமதாஸ் உறுதி
13 Jun 2025தைலாபுரம் : தன்னுடைய மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்கமாட்டேன், என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
திடீர் தொழில்நுட்ப கோளாறு: திறந்த வெளியில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
13 Jun 2025சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான அப்பாச்சி ஹெலிகாப்டர், தொழில்நுட்பக் கோளாறு
-
மனு வாங்கி குறைகளை நிவர்த்தி செய்வதே ஆட்சியாளர்கள் கடமை: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
13 Jun 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., அ.தி.மு.க.
-
அதிகாலையில் தெஹ்ரானில் குண்டு மழை: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
13 Jun 2025தெஹ்ரான் : ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
-
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சினில் கோளாறா? - பயணி புகாரால் பரபரப்பு
13 Jun 2025அகமதாபாத் : விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்த அந்த விமானத்தில் வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தாக பயணி ஒருவர் தெரிவித்த குற்றச்சாட்
-
டெஸ்ட் கிரிக்கெட்: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
13 Jun 2025லார்ட்ஸ் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 43 ஆண்டு கால சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார்.
ரபாடா அபாரம்...
-
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை
13 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு ஈரானுக்கு மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
-
நாட்டிற்காக சிறப்பானதை செய்ய அற்புதமான வாய்ப்பு: கவுதம் காம்பீர்
13 Jun 2025பெக்கன்ஹாம் : நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய இந்த அற்புதமான வாய்ப்பைப் பெற்றுள்ளோம் என்று இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் காம்பீர் எழுச்சி உரையாற்றினார்.
-
மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவு: கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்
13 Jun 2025சென்னை : மீன்பிடி தடைகாலம் முடிவுக்கு வருவதையொட்டி, கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.