எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Monday, December 23, 2024 to Sunday, December 29, 2024
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- இந்த வாரம் உங்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டு. உடன்பிறப்புகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவர். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் எழாது. சுலபமாக வசூலாகிவிடும். தம்பதிகளுக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாக இணைந்து பேரின்பம் அடைவது உறுதி. மிகவும் அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும்.
பரணி -- இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான பலன்கள் நடக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. பண விஷயமான சிந்தனைகள் எழும். தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள், வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கு தேவையான பணவரவுகள், பணவுதவி கள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு போன்ற முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர் கள்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சுப வார்த்தைகளைக் கேட்டு ஞான தன்மைக்கு மாற முயல்வீர்கள் சிலருக்கு நண்பர்கள் கூட பகைவர் ஆகலாம். எப்போதும் பண விஷயமான சிந்தனைகள் எழும். அரசு அதிகாரிகள் தொல்லை தரலாம். நண்பர்களிடையே போட்டி பொறாமைகள் அதிகமாகும். சிலர் காவல்துறை பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். செய்யும் தொழிலில் இலாபம் குறைந்து, தடைகள் ஏற்படலாம். தந்தை வழி உறவுகள் தொல்லை ஏற்படலாம். சிலருக்குக் குழந்தைகள் அவமானமும், மனக் கலக்கம் ஏற்படும். அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம்.
ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். புத்திர பாக்கியம், பதவி உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வருமானம் அதிகம் வந்தாலும், செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. தொழிலில் கூட்டாளியின் புதிய ஆலோசனைகள் வரவேற்கத்தக்கதாக இருக்கும். அவரது கடமை உணர்வும், திறமையும் உங்களுக்கு திருப்திகரமாக இருந்தாலும், அவரை முழுமையாக நம்பி விடாதீர்கள். சந்தையின் தேவைக்கு ஏற்ப புதிய முதலீடுகளை செய்ய முற்படுவார்கள். சிலருக்குக் குதூகலமாய் இருந்த குடும்ப ஒற்றுமை குறைவதால் மகிழ்ச்சி குறையும். எனவே, அனுசரித்துச் செல்வது நல்லது. தூக்கமின்மையால் சுறுசுறுப்பற்ற தன்மை நிலவும்.
ரோகிணி – இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். அரசுப் பணியாளர்களுக்கு ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். கோடை வெப்பம் காரணமாக உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் வரலாம். உடல் நிலையை அலட்சியப்படுத்தாதீர்கள். மனைவியின் அரவணைப்பு மூலம் மனக் கவலைகள் மறந்து பறந்துவிடும். குடும்ப நண்பர்கள் அனுசரணையாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். பெண்கள் குடும்பத்தையும், வேலையையும் ஒருசேர பார்த்து சமாளிக்கத் திணர வேண்டிய சூழ்நிலை நிலவும். ஆயினும் தங்கள் திறமையால் சமாளித்து விடுவர்.
மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் விருந்தினர் வருகை வீட்டில் கொண்டாட்டத்தையும், கும்மாளத்தையும் ஏற்படுத்தி மனதை குஷியாக வைக்கும். உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறும். புதிய சொத்துக்கள் சேரும். சுக சௌகரியங்கள் மேம்படும். சுப வார்த்தைகளைக் கேட்டு நல்ல குணங்களுக்கு மாற முயல்வீர்கள். சிலருக்கு எப்போதும் பண விஷயமான சிந்தனைகள் எழும். அரசு அதிகாரிகள் தொல்லை தரலாம். செய்யும் தொழிலில் இலாபம் அதிகரிக்க பொருளாதாரம் சீராகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கும். அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும். தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்பட்டு, வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். உங்கள் மனதில் எழும் புதுப்புது யோசனைகள் காரணமாகவும், திறமையான நடவடிக்கைகள் மூலமாகவும், உங்களுக்கு, உங்கள் எதிர்பார்ப்பை விட தொழிலில் அதிக இலாபங்களை அள்ளித் தரும். பிரயாணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். குடும்பத்தில் சில நேரங்களில் அமைதியின்மையும் நிலவும்.
திருவாதிரை --- இந்த வாரம் வாக்கு வன்மையால் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். பூஜா வழிபாடுகள் மற்றும் பெரியோர் ஆசிகள் மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சுபச் செய்திகளைக் கேட்டு மகிழ்வார்கள். தொழிலில் புதிய முதலீடுகளால் உற்பத்தி திறன் அதிகரித்து இலாபம் பெருகும். புத்தக வெளியீட்டாளர் களுக்கு தங்கள் தொழிலில் ஏற்றமான காலம். பெரியவர்கள் ஆதரவு எப்போதும் இருக்கும். அறிவு விருத்தி ஆகும். மேலதிகாரிகளின் ஆதரவால் மேன்மை அடைவீர்கள். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். விபத்தை சந்திக்க நேரலாம். கற்பனை வளம் பெருகும். சிலர் மனம் நண்பர்கள் சகவாசத்தால் தீய வழி முறைகளை நாடும். எனவே, கவனம் தேவை.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் மனம் செல்வதால் உற்சாகம் பெருகும். குடும்பத்தோடு கோவில், குளம் புண்ணிய ஸ்தல யாத்திரைகள் எனச் சென்று மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் நட்பு ஏற்படும். வாழ்க்கையில் மனமகிழ்ச்சியையும், சுகானுபவங்கள், அடைவீர்கள். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு உண்ணவும் நேரம் இருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள், வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கு தேவையான பணவரவுகள், பணவுதவி கள் வந்து சேரும்.
கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் இருக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுப காரியங்களுக்கு வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். நல்ல வகையான உணவு வகைகளை உட்கொள்வார்கள். டீக்காக உடையணிந்து ஆட்களை அசத்துவார்கள். வார மத்தியில், குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் பேசப்படும். இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.
அஸ்தம் – இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். மிகமிக முக்கியமான பெரியவர்கள் சகாயத்தால் பெருவாழ்வுக்கான அஸ்திவாரம் அமையும். கையில் எடுக்கும் காரியங்களில் எல்லாம் தடை, தாமதங்கள் ஏற்படும், வேலைகளை முடிக்க தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பழைய நண்பர்களிடம் சுமுகமாக இருப்பது நல்லது. பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். வீட்டில் பெண்களால் அதிக வீண் செலவுகள் ஏற்படும். வேலை விஷயமாக அலைச்சல்கள் ஏற்படும்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் எதிர்பாராத தன வரவுகள், வஸ்திர லாபம், சுகபோஜனம் ஆகியவை ஏற்படும். அரசுத்துறை மூலம் எதிர்பார்த்த ஆதாயங்கள் அனைத்தும் விரைவில் கிடைக்கும் சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். பொறுமையைக் கடைப் பிடித்தால் நல்லது. குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. தொலைதூர செய்திகள் வர இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் புது தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். பக்திப் பெருக்கினால் ஞானத் தன்மை எய்துவார்கள். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும். நண்பர்களிடம் சுமுகமாக இருக்க முயற்சியுங்கள். பயணங்களால் செலவுகள் அதிகமாகும், ஆதலால் பணமுடையும் இருக்கும்.பணிபுரிவர்களுக்கு வேலையில் சிரத்தையும், மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சியும் உண்டாகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.
திருவோணம்- இந்த வாரம் சுக சௌகரியங்கள் கூடும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது எதிர்காலத்துக்கு பயன்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய்மாமனுக்கு நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். இரவுப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் பெரியவர்கள் ஆலோசனைக்கு ஏற்ப பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். நல்ல குரு வாய்க்கப்பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கக் கூடிய அளவுக்குத் திருப்திகரமான தனவரவு இருக்கும். நல்லவர்களின் தொடர்பு மூலம் நன்மைகள் அதிகம் ஏற்படலாம். உணவருந்தும் நேரமின்றி உழைக்க வேண்டியது வரும். அப்படி உண்ணும் உணவும் வாய்க்கு ருசியாக கிடைக்காது. புதிய தொழில் தொடர்புகள் மூலம் எதிர்பார்ப்புக்கு மேல் பணவரவு ஏற்படும். அரசு அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். பங்குச் சந்தையில் இலாபமும், போட்டி பந்தயங்களில் ஆதாயமும் கிடைக்கும். சிலர், தேவையற்ற காரணங்களால் அரசுக்கு அபராதம் செலுத்த நேரலாம்.
பூசம் -- இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். தொலை தூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். உறவுகள் மூலமாகவும் பணவுதவி கள் கிடைக்கும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தந்தைவழி உறவுகளால் ஆதாயங்கள் ஏற்படலாம். நல்லவர்கள் தொடர்பால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பலன்களை அடைவார்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம். கவனம் தேவை.
ஆயில்யம் – இந்த வாரம் தெய்வ சிந்தனைகள் மனதில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். மாணவர்களின் கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும். உங்களுக்குப் பயணங்களில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். தந்தைவழி உறவுகளால் உதவி இருக்காது. சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்படும்.
சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படும். சகோதரரால் நன்மைகள் உண்டு. மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து போராடி வெற்றி பெறுவீர்கள். தொழிலில் பொருட்களின் உற்பத்தி பெருகி, இலாபமும் எதிர்பார்த்தபடி அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்கு வன்மை ஓங்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். கோபத்தை அடக்கி உடன் பிறப்புகளுடன் ஒத்துப் போவது நல்லது.
பூரம் – இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். நல்ல பல கருத்துக்களை கேட்பதின் மூலம் உங்களுக்கு ஞானத் தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக வருவாய் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். உங்கள் உடலில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்கும்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பிறந்த நாள், திருமண விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். கற்பனை வளம் பெருகும். தாய் மூலம் நன்மைகள் ஏற்படும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். நல்லோர் சேர்க்கையால் மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு.
துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் புதிய முயற்சிகள் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். அவர்கள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும்.
சுவாதி – இந்த வாரம் இரவு விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி பொங்க பொழுதை கழிப்பீர்கள். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடம் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி திக்கை நோக்கிச் செல்லும். சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் பல புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். எப்போதும் தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். நீங்கள் எதிர்பாராத விதத்தில், நினைத்த இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வியாபாரிகள் கவர்ச்சிகரமான பொருட்களை பரிசாக அறிவித்து தங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். மாணவர்கள் அன்றன்றைக்கு தங்கள் பாடங்கள் அனைத்தையும் அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்.
மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் கலைஞர்களுக்கு சிறப்பான வாரம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, கை நிறைய முன் பணம் பெற்று மகிழ்வர். தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இதுநாள் வரை இருந்து வந்த இழுபறி நிலைகள் பகலவனைக் கண்ட பனிபோல் விலகும், சிலருக்கு வருமான வரி பிரச்சனைகள் தலை தூக்கலாம் எனவே, கம்பெனி கணக்குகளை சீராக எழுதி வைக்கவும். இல்லையெனில் சிக்கல்களைச் சந்திக்கலாம். வந்தபின் ஓடுவதை விட, வருமுன் காப்பது தானே புத்திசாலித்தனம். வீட்டில் பிடிவாதங்களை தளர்த்தினால் பிணக்குகள் தீரும். இடம் சம்பந்தமான வழக்குகள் வெற்றி பெற்று, புதிய சொத்துக்கள் சேரும்.
உத்திரட்டாதி- இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டு. குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் தீர்த்து வைக்கப்படும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு தேவைப்படும். வீட்டில் நவீன உபகரணங்கள் பலவற்றை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.
ரேவதி- இந்த வாரம் உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். அன்பு மிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். புது வீடு கட்டிக் குடியேறும் பாக்கியம் ஏற்படும். இது நாள் வரை போராடி வந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வெற்றி அடையும்.
தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். மிகப்பெரிய சாகசங்களை புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
பூராடம் – இந்த வாரம் புதிய தொழில் வாய்ப்புகள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். சிலருக்குத் அவர்கள் கை வைக்கும் வேலைகளில் எல்லாம் தடை தாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.. வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவில்லை என்றால் தண்டம் கட்ட வேண்டியது வரும்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் எல்லா நிகழ்வுகளும் மகிழ்ச்சியை வரவழைக்கும். பெரியோர்களின் ஆசி, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஆகியவற்றால் நல்ல மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலம் உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். கடின உழைப்பு எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். சிலருக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் மனம் போல் நடக்கும். சிலருக்குப் புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். அரசுப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலமான நடவடிக்கைகள் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவிகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்பு தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்வர். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சிலருக்குப் பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்கள் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும்.
அனுஷம் – இந்த வாரம் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும்.
கேட்டை – இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் உடன் பிறப்புக்களின் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவி கள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். சிலருக்கு ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையில், மனோபயம் நிலவும்.
கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். எப்போதும், உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.
சதயம்- இந்த வாரம் நல் ஆரோக்கியமும், புது தெம்பும், புத்தொளியும் ஏற்படும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பால் உள்ளம் மகிழும். தொழிற்சாலையில் புதிய எந்திரங்களை நிர்மாணித்து, உற்பத்தியை பெருக்கி உன்னத நிலையை அடைவீர்கள்.தொழிற்சாலைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் நவீன உணவு விடுதிகளில் உண்டு மகிழ்வார்கள். உங்கள் தொழில் வழி முன்னேற்றம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெறும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் தாராளமான பணவரவு இருக்கும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் இனிதே நடைபெறும். சமயோஜிதமாக செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகள் பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் இதுவரை ஏற்பட்ட பெரும் குழப்பங்கள் தீரும். புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். தீய குணம் உள்ள நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. புதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இஸ்ரேல் - ஈரான் மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்
13 Jun 2025புதுடில்லி : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழலை தவிர்க்க, இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
-
உயிர்வாழ்விற்கான போராட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு
13 Jun 2025ஜெருசலேம் : எங்கள் உயிர்வாழ்விற்கான போராட்டம் என ஈரான் மீது தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-06-2025
13 Jun 2025 -
மின்வாரியத்தில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களுக்கு தேர்வு : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
13 Jun 2025சென்னை : மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு நடத்தப்பட இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி.
-
மலைப்பகுதியில் சாரல் மழை: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
13 Jun 2025தென்காசி, குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் தொடர்ந்து ஒரு வாரமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
-
உயிர் பிழைத்தது எப்படி? - விமான விபத்தில் தப்பித்த விஷ்வாஸ் குமார் பேட்டி
13 Jun 2025அகமதாபாத் : உயிர் தப்பியது எப்படி என விமான விபத்தில் தப்பித்த ஒற்றை நபரான விஸ்வாஸ் குமார் பேட்டியளித்தார்.
-
கீழடி அகழாய்வில் மேலும் சான்றுகள் கேட்கிறார்கள்: தமிழர்களின் வரலாற்றை மறைத்து அழிக்க முயற்சி : மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
13 Jun 2025சென்னை : கீழடி அகழாய்வில் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள், இது தொடர்பாக மேலும் சான்றுகள் தேவை என்று தமிழர்களின
-
அகமதாபாத் விமான விபத்து: 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
13 Jun 2025அகமதாபாத் : ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
-
கடவுள் தான் காப்பாற்றினார்: விமானத்தை தவறவிட்ட குஜராத் பெண் நெகிழ்ச்சி
13 Jun 2025அகமதாபாத் : விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி சவுகான், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார்.
-
எட்டயபுரம் அருகே கார் விபத்து: 4 பேர் மரணம்; நீதிபதி படுகாயம்
13 Jun 2025கோவில்பட்டி : எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
ஒரு பவுன் ரூ.74,360-க்கு விற்பனை: மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
13 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 13) பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,360-க்கு விற்பனையானது.
-
நீலகிரிக்கு ரெட் அலர்ட்: 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
13 Jun 2025சென்னை : நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான
-
கருப்பு பட்டையுடன் வீரர்கள்
13 Jun 2025குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளா
-
அகமதாபாத்தில் பலியானவர்களுக்கு த.வெ.க. சார்பில் மவுன அஞ்சலி
13 Jun 2025மாமல்லபுரம் : அகமதாபாத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
ஸ்ரீரங்கம் தொகுதியில் விஜய் போட்டி? - திருச்சி த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு
13 Jun 2025திருச்சி : விஜய் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
-
விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
13 Jun 2025அகமதாபாத் : அகமதாபாத் விமான விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
என்னுடைய மூச்சுக்காற்று இருக்கும் வரை நானே தலைவர்: ராமதாஸ் உறுதி
13 Jun 2025தைலாபுரம் : தன்னுடைய மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்கமாட்டேன், என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
திடீர் தொழில்நுட்ப கோளாறு: திறந்த வெளியில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
13 Jun 2025சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான அப்பாச்சி ஹெலிகாப்டர், தொழில்நுட்பக் கோளாறு
-
மனு வாங்கி குறைகளை நிவர்த்தி செய்வதே ஆட்சியாளர்கள் கடமை: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
13 Jun 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., அ.தி.மு.க.
-
அதிகாலையில் தெஹ்ரானில் குண்டு மழை: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
13 Jun 2025தெஹ்ரான் : ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
-
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சினில் கோளாறா? - பயணி புகாரால் பரபரப்பு
13 Jun 2025அகமதாபாத் : விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்த அந்த விமானத்தில் வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தாக பயணி ஒருவர் தெரிவித்த குற்றச்சாட்
-
டெஸ்ட் கிரிக்கெட்: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
13 Jun 2025லார்ட்ஸ் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 43 ஆண்டு கால சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார்.
ரபாடா அபாரம்...
-
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை
13 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு ஈரானுக்கு மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
-
நாட்டிற்காக சிறப்பானதை செய்ய அற்புதமான வாய்ப்பு: கவுதம் காம்பீர்
13 Jun 2025பெக்கன்ஹாம் : நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய இந்த அற்புதமான வாய்ப்பைப் பெற்றுள்ளோம் என்று இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் காம்பீர் எழுச்சி உரையாற்றினார்.
-
மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவு: கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்
13 Jun 2025சென்னை : மீன்பிடி தடைகாலம் முடிவுக்கு வருவதையொட்டி, கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.