எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி
நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி
அண்மையில் வெளியாகியுள்ள 'பென்சில்' படத்தில் ஜீ.வி. பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளவர் சுஜா வருணி.
இவருக்கு வசீகரமுகமும் நடிப்புத்திறனும் இருந்தும் இன்னும் ராமனின் கால் பட அகலிகை கல்லாகக் காத்திருந்தது போல நல்ல வாய்ப்புக்காக பொறுமையாகக் காத்திருக்கிறார்.
சுஜா வருணி இது பற்றிக் கூறும் போது " எனக்குப் புலம்பும் எண்ணமும் இல்லை.ஆதங்கமும் இல்லை. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்படும் குணமும் எனக்கு இல்லை.
நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்து இருக்கிறேன். வருகிற வாய்ப்புக்கு முழு அர்ப்பணிப்பு தர நான் தயாராக இருக்கிறேன். 'பென்சில்' படத்தில் நான் கதாநாயகி இல்லை என்றாலும் படம் முழுக்க வருவேன். கதையில் சஸ்பென்ஸ் முடிச்சில் என் கேரக்டர் இருக்கும். அதைப் பார்த்த பலரும் என்னிடம் அன்புடன் விசாரித்துப் பேசுகிறார்கள்.
என் சமூக வலைதளங்களில் தினமும் 200 பேராவது என் இன்பாக்ஸில் வந்து கருத்து சொல்கின்றனர். உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
நண்பர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் உறவினர்களும் பாராட்டுகின்றனர்.'' என்கிறார்.
இப்போது சுஜா நடித்து வரும் படங்கள் பற்றி என்ன கூறுகிறார்?
"அருண் விஜய்யுடன் 'வாடீல்' சசிகுமாரின் 'கிடாரி' மற்றும் 'சதுரம்-2' படங்களில் நடித்து வருகிறேன்.
'பென்சில்' படம் பார்த்து இரண்டு புதிய படவாய்ப்புகள் வந்திருக்கின்றன.
இதில் எல்லாமே பெயர் சொல்லும்படி, அடையாளம் கிடைக்கும்படியான கேரக்டர்கள் தான். ஆனால் அது பற்றி எதுவுமே வெளியில் சொல்லக் கூடாது என்று ஒப்பந்தமே போட்டுள்ளார்கள். என்னால் ஒரே கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கும் போரடிக்கும். பார்ப்பவர்களுக்கும் போரடிக்கும், திகட்டும்.
ஹாரர் படங்களில், சைக்கோத்தனமான கேரக்டர்களில், மனநிலை பிறழ்ந்த கேரக்டர்களில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். நெகடிவ் ரோல்களில் கூட நடிக்க நான் தயார்." என்றவரிடம் அப்படி யென்றால் கதாநாயகியாக நடிக்க ஆசை, ஆர்வம் இல்லையா? எனக் கேட்ட போது,
"கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மறுக்க நான் முட்டாள் அல்ல. அதே நேரம் போஸ்டரில் படம் போட்டால் மட்டுமே லீடு ரோல் என்பது அல்ல. என்னிடம் சுஜா நீ ஏன் லீடுரோல் எடுக்கக் கூடாது என்கிற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. படத்தில் முக்கியமாக சஸ்பென்ஸாக இருப்பதும் கூட 'லீடு ரோல்' என ஏற்க வேண்டியதுதான்.
சினிமா இப்போது மாறியிருக்கிறது. இப்போது கதாநாயகியை மையப்படுத்திய படங்களை விட குணச்சித்திரங்களை மையப்படுத்திய படங்கள் நிறைய வருகின்றன. படத்தை 'லீடு' செய்பவை இப்போது இப்படிப்பட்டவைதான் அப்படிப்பட்ட குணச்சித்திரமாகவும் நடிக்க ஆசை.''
அவ்வப்போது விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறேன். அடுத்த படியேற ஆசை. அது மட்டுமல்ல பெயர் சொல்லும் கேரக்டர் செய்யவும் தயார்.'' என்கிறார்.
சுஜாவின் இளமை, தோற்றம், நடிப்புக்கு ஏன் இன்னமும் தடை தாண்டி சிரமத்துடன் போராடி ஓடும் நிலை உள்ளது ?
"சினிமாவில் சில விஷயங்கள் எனக்குப் புரிவதில்லை. எனக்குச் சரியான வழிகாட்டல் இல்லை. வழிகாட்ட எடுத்துச் சொல்ல சரியான ஆட்கள் இல்லை. சினிமாவில் எங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. அடுத்ததாக, நேரம் என்று ஒன்று வர வேண்டும். அது முக்கியம். அடுத்து திறமையும் வேண்டும்.
நான் இதுபற்றி வருந்துவதைவிட முயற்சியை, கடின உழைப்பை போடுவோம். அதற்குப் பலன் உண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன். இப்படியே என் பயணம் இருக்கிறது. முன்னே ஓடுபவரைப் பார்த்து பொறாமைப்பட்டாலும் பின்னே ஓடி வருபவரைப் பார்த்து கவலைப்பட்டாலும் என் ஓட்டத்தை கவனிக்க முடியாது. எனக்கு என் ஓட்டம் முக்கியம். '' என்றவர் தன் ரோல் மாடல் நடிகை ரம்யா கிருஷ்ணன்தான் என்கிறார்.
"அவர் இன்று எத்தனை பேருடன் நடித்தாலும் தனித்து தன்னை வெளிப்படுத்தி விடுவார். அவருக்கு தனித்த அடையாளம் கிடைத்திருக்கிறது. பாசிடிவ், நெகடிவ், டான்ஸ், வெஸ்டர்ன் என எல்லாவற்றிலும் பெயர் வாங்கி விடுவார். இந்த இடம் அவருக்குச் எளிதாக கிடைக்கவில்லை. போராடித்தான் பெற்றிருக்கிறார். அவர்தான் எனக்கு முன் மாதிரி. அவர் இடத்தை பிடிக்க முடியுமோ முடியாதோ அவர் நிழலையாவது பிடிப்பேன்.''
யதார்த்தமும் நம்பிக்கையும் சுஜாவின் பேச்சில் தென்படுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை : தொல். திருமாவளவன் கணிப்பு
06 Jul 2025திருச்சி : பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்
06 Jul 2025நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஒடிசா, புரி ஜெகநாதரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
06 Jul 2025புவனேஸ்வர் : தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் நோய்க்கு 17 பேர் பலி : பொதுமக்கள் அதிர்ச்சி
06 Jul 2025திருவனந்தபுரம் : கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
06 Jul 2025திருப்புவனம் : திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் நீதிபதி சந்திரசூட் விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கியுள்ளார்.