எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ரெமோ' பட நன்றி விழா
'ரெமோ' பட நன்றி விழா
உணர்ச்சிகரமான திருவிழாவாக மாறிய 'ரெமோ' படத்தின் நன்றி விழா
சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரெமோ திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகி இருந்தாலும், திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் இன்னும் அலைமோதி கொண்டு தான் இருக்கிறது.... வர்த்தக ரீதியாக அமோக வசூலை பெற்று வரும் ரெமோ திரைப்படத்திற்காக தங்களின் ஆதரவை தொடர்ந்து அளித்து வந்த விநியோகஸ்தர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக , தயாரிப்பாளரும், 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆர் டி ராஜா ஒரு பிரம்மாண்ட நன்றி விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
நேற்று சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்ற இந்த நன்றி விழாவில், ரெமோ திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களான திருப்பூர் சுப்ரமணியம், சேலம் ராஜ மன்னார், மதுரை அழகர்சாமி, நார்த் ஆற்காடு - சவுத் ஆற்காடு ஸ்ரீநிவாசன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், திருச்சி பிரான்சிஸ் அடைக்கலராஜ், திருநெல்வேலி பிரதாப் ராஜா, வெளிநாட்டு விநியோகஸ்தர் யஹிரா பாய் ஆகியோரும், ரெமோ படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினர்களான தயாரிப்பாளர் ஆர் டி ராஜா, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிரூத், சவுண்ட் என்ஜினீயர் ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ரூபன், ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி, பாடலாசிரியர்கள் விவேக் - கு கார்த்திக், கே எஸ் ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், ஆன்சன் மற்றும் யோகி பாபு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியரில் ஆரம்பித்து கதாநாயகன் வரை அனைவரும் ரெமோ படத்தின் நன்றி விழாவை உணர்ச்சிகரமான திருவிழாவாக மாற்றி விட்டனர்.
"ரெமோ படத்தின் வெற்றிக்கு ஒரு மூல காரணம் சிவகார்த்திகேயன்... அதே போல் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி சி சாரின் பெயருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த கைத்தட்டல்கள் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது.... தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தாயாக வலம் வந்து கொண்டிருப்பவர் சரண்யா... ரெமோ படத்தில் அவரின் கதாபாத்திரம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை அள்ளிக் குவித்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திற்கு பிறகு நான் விநியோகம் செய்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை... ஆனால் ரெமோ படம் எனக்கு அளித்த உற்சாகமும், புத்துணர்வும், என்னை மீண்டும் விநியோக துறையில் ஈடுப்பட செய்தது... பொதுவாகவே விநியோகஸ்தர்கள் தான் ஒரு திரைப்படத்தை வாங்க தயாரிப்பாளரை நாடி செல்வர்.... ஆனால் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா எந்தவித ஈகோவும் இன்றி எங்களை வந்து சந்தித்தது எங்களுக்கு எல்லா விநியோகஸ்தர்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது...ரெமோ திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண் ஆர் டி ராஜா என்பதை நான் உறுதியாகவே சொல்வேன்..." என்று கூறினார் முன்னணி விநியோகஸ்தர்களுள் ஒருவரான திருப்பூர் சுப்ரமணியம்.
"ஒரு திரைப்படத்திற்கு நன்றி விழா என்பதை நான் இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்... சினிமா மீது அளவு கடந்த அன்பும், சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்து கொள்ளும் குணம் கொண்ட மனிதர்களால் தான் இத்தகைய செயல்களை செய்ய முடியும்.... அப்படி நான் பார்த்த தயாரிப்பாளர்களுள் ஆர் பி சொளத்ரி சாரும், ஏ எம் ரத்னம் சாரும் சிலர்.... அப்படி ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் ஆர் டி ராஜாவை பார்க்கிறேன்....ரெமோ படத்தின் உண்மையான வெற்றிக்கு சான்றாக திகழ்பவர்கள் விநியோகஸ்தர்கள்....அவர்களை மேடையேற்றி, தன்னுடைய நன்றிகளை தெரிவித்த தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவிற்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்...." என்று உற்சாகமாக கூறினார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.
"ரசிகர்களுக்கு தரமான படங்களை வழங்கி, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே எங்களின் தலையாய கடமை. எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் இரண்டரை வருட உழைப்பு தான் 'ரெமோ'....தயாரிப்பாளர் ஆர் டி ராஜா அவர்களுக்கும், அவருடைய குழுவிற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை... ஆனால் அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன்....இவ்வளவு தூரம் எங்களுக்கு ஆதரவு வழங்கி, தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் என்னுடைய அன்பான ரசிகர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...." என்று கூறினார் சிவகார்த்திகேயன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
மதுரவாயலில் 1,600 பேருக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
13 Oct 2025சென்னை, சென்னை, மதுரவாயில் பகுதியில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் குழு அமைப்பு
13 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.