முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி கூட்டுகுடிநீர் திட்டபணிகள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், ஏப். - 8 - திருமங்கலம் பகுதிகளுக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்.  தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், அவனியாபுரம், திருமங்கலம், திருநகர், விளாங்குடி, அ. வெள்ளாளபட்டி, அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1430 ஊரக குடியிருப்பகங்களில் வசித்திடும் மக்கள் பயன் பெற்றிடும் வகையில் ரூ. 784 கோடி செலவில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  இந்த திட்டத்திற்காக கருர் மாவட்டம் காவிரி ஆற்றில் 3 நீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் நகராட்சிக்கு நாளொன்றுக்கு 4.5 மில்லியன் லிட்டர் கிடைத்திடும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போல் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின் துவக்க விழா நேற்று பூமி பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கலெக்டர் சகாயம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இதையடுத்து இந்த பணிகளுக்காக திருமங்கலம் சந்தை பேட்டை பகுதியில் தரைமட்ட குடிநீர் தொட்டி அமைத்திட ராட்சத எந்திரம் கொண்டு கிணறு தோண்டப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் சாமி, தமிழரசன், கருப்பையா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மராஜ், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், திருமங்கலம் தொகுதி செயலாளர் ஆண்டிசாமி, நகர செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன், துணை சேர்மன் பசுபதி ஆண்டிச்சாமி, திருமங்கலம் நகர்மன்ற தலைவர் உமாவிஜயன், துணை தலைவர் சதீஷ்சண்முகம், கள்ளிக்குடி யூனியன் சேர்மன் உலகாணி மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், நகராட்சி ஆணையர் முகமது சிராஜ், யூனியன் ஆணையர் ராஜம்மாள், மாவட்ட கவுன்சிலர்கள் பிரபுசங்கர், அன்னலெட்சுமி, திருப்பரங்குன்றம் நகர செயலாளர் பன்னீர் செல்வம், திருமங்கலம் நகர அவை தலைவர் ஜஹாங்கீர், துணை செயலாளர் ராஜாமணி, பொருளாளர் துரைபாண்டி, ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, முருகேசன், மேலூர் நகர்மன்ற தலைவர் சரவணன், மாவட்ட பிரதிநிதி கலைசெல்வன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

ரூ. 784 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இரண்டு ஆண்டுகளில் முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தின் மூலம் திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசித்திடும் மக்களுக்கு இனி குடிநீர் பஞ்சம் இல்லை என்ற சூழல் உருவாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

----

 

புட்நோட்

1. திருமங்கலத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார். அருகில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் சகாயம் மற்றும் எம்.எல்.ஏக்கள் சாமி, தமிழரசன், கருப்பையா ஆகியோர் உள்ளனர். 

2. திருமங்கலம் பகுதியில் செயல்படுத்தப்படவுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட பூமி பூஜையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மாவட்ட கலெக்டர் சகாயம், எம்.எல்.ஏக்கள் முத்துராமலிங்கம், சாமி, தமிழரசன், கருப்பையா மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

3. திருமங்கலம்பகுதியில் செயல்படுத்தப்படவுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கலெக்டர் சகாயம், எம்.எல்.ஏக்கள் முத்துராமலிங்கம், சாமி, தமிழரசன், கருப்பையா மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்