முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யூரோ கால்பந்து: ஸ்பெயின் - இத்தாலி இன்று பலப்பரிட்சை

சனிக்கிழமை, 30 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

ஜூலை. 1 - உலகளவில் பல கோடி ரசிகர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் 14-வது யூரோ கோப்பைக்கான இறுதிப்போட்டியில் அதிரடி தாக்குதல் நடத்தும் இத்தாலி அணியும், யூரோ கோப்பை மற் றும் உலகக் கோப்பை நடப்பு சாம்பி யன் ஆன மதிநுட்பமான ஸ்பெயின் அணியும் நாளை (ஜீலை-1ல்) மோது கின்றன. யூரோ கோப்பை கடந்த ஜூன் -8ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெ ற்று வருகிறது. இப்போட்டியினை உக் ரைன் மற்றும் போலந்து இணைந்து நடத்துகின்றன.

38 பில்லியன் யூரோ செ லவில் விளை யாட்டு போட்டிகளுக் கான கட்டமை ப்பு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 16 நாட்டு அணிக ள் கலந்து கொண்டன.மொத்தம் 31 போட்டிகள்  ஆகும்.

இப்போட்டியில் மொத்தம் 16 அணிக ள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப் பட்டு ஏ-பிரிவில் போலந்து, கிரீஸ், ரஷ் யா,செக் குடியரசு அணிகளும், பி-பிரி வில்  நெதர்லாந்து,டென்மார்க் ,ஜெர் மனி,போர்ச்சுக்கல் அணிகளும், சி-பி ரிவில் இத்தாலி, ஸ்பெயின் ,அயர்லா ந்து, குரோசியா அணிகளும், டி-பிரிவி ல் உக்ரைன், சுவீடன், பிரான்சு, இங்கி லாந்து, அணிகளும் பங்கேற்றன.

ஒவ்வொரு பிரிவுகளிலும் புள்ளிகள் அடிப்படையில் தலா இரண்டு அணிகள் தேர்வு பெற்றது. மொத்தம் எட்டு அணிகளான ஏ-பிரிவில் கிரீஸ்,செக் குடியரசு, பி-பிரிவில் ஜெர்மனி, போர் ச்சுக்கல், சி-பிரிவில் இத்தாலி, ஸ்பெயி ன், டி-பிரிவில் பிரான்சு,இ ங்கிலாந்து, அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

அடுத்ததாக கால் இறுதியில் நடைபெற்ற நாக்-அவுட் போட்டியில்  போர்ச்சுக் கல் அணி  செக் குடியரசு அணியையும் ,ஜெர்மனி அணி கிரீஸ் அணியையும் ,ஸ்பெயின் அணி பிரான்சு அணியை யும் ,இத்தாலி அணி இங்கிலாந்து அணியையும் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

ஜூன் -27 ஆம் தேதி உக்ரைன் நாட்டில் டன்ஸ்க் நகரில் நடைபெற்ற  யூரோ கோப்பை நடப்பு சாம்பியன் ஸ்பெயி ன் அணியை போர்ச்சுக்கல் அரை இறு தி போட்டியில் எதிர்கொண்டது, பரபரப்பாக 133 நிமிடங்கள் (எக்ஸ்ட்ரா நிமிடங்கள் உட்பட) நடைபெற்ற அரை இறுதி போட்டியில் பெனால்டி ஷீட் அவுட்  4 க்கு 2 என்ற கோல் கண க்கில் ஸ்பெயின் அணி போர்ச்சுக்கல் அணியை வென்றது. ஸ்பெயின் அணி வெற்றி  பெறுவதற்கான கோலிகளை செஸ்க் பேப்ரிகாஸ்  அடித்தார்.போட்டியின் கடைசி பெனாலிட்டிஷூட் அவுட் கோலினை அடித்து ஸ்பெ யினை வெற்றி பெறச் செய்த பேப்ரி காஸ் கூறும் போது இப்போட்டி பெ னாலிட்டி  ஷீட் வரை சென்றால் நிச்ச யம்  நாங்கள் வெற்றி பெறுவோம் என் று என் உள்ளுணர்வு சொன்னது, அதே போல் நாங்கள் வெற்றி அடைந்தோம். இப்போட்டியில் 59 சதவீதம் ஸ்பெயின் அணியும் 41 சதவீதம் போர்ச்சுகல் அணியும் பந்தினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் இதுவரை நடைபெற்ற யூரோ கோப்பையில் 4 முறை (1964, 1984,2008, 2012 ஆண்டுகள்) இறுதி போ  ட்டிக்கு தகுதி பெற்றது.1984-ஆண்டை தவிர்த்து 1964 மற்றும் 2008 யூரோ கோப் பையில் வென்று இருக்கிறது. 

ஜூன்.28-ஆம் தேதி போலந்து நாட்டில் வார்சா நகரில் நடைபெற்ற அரை இறு திப் போட்டியில் இத்தாலி அணியும்,ஜெர்மனி அணியும் மோதின. இப்போட்டியில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வென்றது.

மொத்தம் 96 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் இத்தாலி அணி 47 சதவீ தம் ,ஜெர்மனி அணி 53 சதவீதமும் பந் தினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தன. பல கோடி மக்கள் பரபரப் பாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் நாளை (ஜூலை 1) நடைபெற இருக்கு ம் இறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இத்தாலி அணியும் மோதுகின்றன.

ஸ்பெயின் அணி லீக் ஆட்டத்தில் கடந்த ஜூன் 10-ல் எதிர் அணியான இத் தாலியை 1-1  என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.,ஜூன் -14 -ல் எதிர் அணியான  அயர்லாந்துடன் 4 - 0 என்ற  கோல் கணக்கிலும், ஜூன்- 18 ல் எதிர் அணியான குரோசியா 1-0 என்ற கோல் கணக்கில்  ஸ்பெயின் அணி வெ ன்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

கால் இறுதியில் கடந்த ஜூன்-23  ல் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியுடன் 1-0 என்ற கோல் கணக்கில் கால் இறுதியில் வென்று அரை இறுதி க்கு ஜூன் 27 ல் நடைபெற்ற ஆட்டத் தில் போர்ச்சுக்கலுடன் 4 - 2 (பெனால் டி ஷூட் அவுட்) என்ற கோல் கணக்கி ல் அரை இறுதி போட்டியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதே போல் இத்தாலி அணியும் ஜூன்-10 ல் ஸ்பெயின் மோதி 1-1 என்ற கணக் கிலும், ஜூன் -14ல் குரோசியாஅணியு டன் மோதி 1-1 என்ற கோல் கணக்கி லும், ஜூன்-18 ல் அயர்லாந்துடன் மோதி 2-0 என்ற கோல் கணக்கில் வெ ன்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணியுடன் ஜூன் 24ல் மோதி 4 - 2 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்று, ஜூன் 28-ல் ஜெர்மனியுடன் மோதி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

ஜூலை 1-ல் உக்ரைனில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஸ்பெயி னும், இத்தாலியும் மோத இருப்பது கால்பந்து ரசிகர்களிடையேயும் ,விளையாட்டு ஆர்வலர்களிடையேயும்  எதி ர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு யூரோ சாம்பியனான ஸ்பெயின் அணி தங்களின் சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யும்.

ஸ்பெயின் அணியில் நட்சத்திர வீரர்களாக  ஷாவிஹர்மான்டைஸ் ,அன்ட்ரஸ் இனியஸ்டா, ஆல்வேனா ஆர்பே லோ,மற்றும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடி த்து வெற்றியை தேடித் தந்த கேஸ்க் பே

ப்ரிகாஸ் ஆகியோர் உள்ளனர். மேலும் அனுபவம் மிக்க கேப்டன் ஐகேர் கேசி ல்லாஸ் கோல் கீப்பராக உள்ளார். இவர் 2010-ல் நடந்த உலக கோப்பை கால்பந்தில் கோல்டன் குளோவ் விரு தினை பெற்றார். மேலும் அனுபவம் மிக்க வின்சென்ட் டி பாஸ்கி ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக உள்ளார். இத்தாலி அணி 1968 ஆம் ஆண்டில் நடைபெற்ற யூரோ கோப்பையில்  யூகோஸ்லோவேகியா அணியை  வென் று இருக்கிறது. அதன் பின்பு 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதி  போட்டி யில் இத்தாலி அணி பிரான்ஸ் அணியி டம் தோற்றது. 

அதனால்  இறுதிப்போட்டியில் ஸ்பெ யின் அணியை வெல்லுவதற்கு அனைத்து யுக்திகளையும், தாக்குதல் ஆட்டத் தையும் கையாண்டு கோப்பையை கை ப்பற்ற முயற்சி செய்யும். 

அரையிறுதி ஆட்டத்தில் நல்ல பார்மில் இருந்த ஜெ ர்மனியை அதிரடி தாக்குத லால் 2-1 என்ற கோல் கணக்கில் அசத் தல் வெற்றி பெற்றது. இத்தாலி அணியில் நட்சத்திர வீரர்களாக மரியோ பலாட்டிலி,ஆன்ட்ரி பிர்லா, ஆன்டோ னியோ கேசனோ,ரிக்கார்டோ மண்டோலிவோ உள்ளனர்.  

இத்தாலி அணியின் முன் கள தாக்குதல் ஆட்டக்காரரான மரியோ பலாடிலி  ஜெர்மனிக்கு எதிரான  அரையிறுதியில்  வென்ற பிறகு இவ்வெற்றியை என் அம் மாவுக்கு அர்ப்பணிப்பு செய்கிறேன் என்றும், இன்றைய நாள் (ஜூன்-28-ஆ ம் தேதி) மிகவும் நல்ல நாள் , இதே போன்று ஜூலை -1 ஆம் தேதியும்  சிறப்பான நாளாக அமையும் என நம்பு கிறேன் என கூறியுள்ளார். 

நாளை ஆட்டத்திற்கு இத்தாலி அணியி ன்  பயிற்சியாளர் கெஸாரே பிரான்ட லி தனது நூற்றுக்கணக்கான பயிற்சி, மற்றும் அதிரடி தாக்குதல் ஆட்டத்தை இத்தாலி அணியின் மூலம் வெளிபடு த்துவார்  என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலி அணியின் கோல் கீப்பர் புபான் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். 2006-ல் நடைபெற்ற உலக கோப் பை பைனலில் இத்தாலி பிரான்சை வீழ்த்தியது. அப்போதும் புபான் தான் கோல் கீப்பராக இருந்தார் என்பது குறி ப்பிடத்தக்கது. 

இப்போட்டியில் வெற்றி பெறப் போ வது, இத்தாலி அணியா? ஸ்பெயின் அணியா? என்பது புதிர்!  இது வரை நடைபெற்ற யூரோ கோப்பை சாம்பிய ன்கள்:

1960 - சோவியத் யூனியன்

1962 - ஸ்பெயின்

1968 - இத்தாலி

1972 - மேற்கு ஜெர்மனி

1976 - செக்கோஸ்லோவேக்கியா

1980 - மேற்கு ஜெர்மனி

1984 - பிரான்ஸ்

1988 - நெதர்லாந்து

1992 - டென்மார்க் 

1996 - ஜெர்மனி

2000 - பிரான்ஸ்

2004 - கிரீஸ்

2008 - ஸ்பெயின்

2012 - ?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்