முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழசுக்குப் புதுசு விற்பனை: அமைச்சர் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.10 - கோ​ஆப்டெக்ஸின் பட்டுச் சேலை பழசுக்குப் புதுசு  விற்பனையை கைத்தறி மற்றும் துணிநூல்  துறை  அமைச்சர் மருத்துவர் எஸ். சுந்தரராஜ்  சென்னை, எழும்ர்,  பாந்தியன் சாலையில் உள்ள தில்லையாடி  வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் நேற்று துவக்கி  வைத்தார்.இந்த  புதுமையான திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய நைந்து கிழிந்துபோன பட்டுப்  புடவைகளை தங்களின் அருகாமையில் உள்ள கோ​ஆப்டெக்ஸ்  விற்பனை நிலையத்தில் கொடுத்து புத்தம் புதிய பட்டுச் சேலையை வாங்கிக்  கொள்ளலாம். பழைய பட்டு சேலையின் மதிப்பு  வாங்கும் புதிய பட்டு சேலை மதிப்பை வைத்து தீர்மானிக்கப்படும்.  உதாரணமாக வாடிக்கையாளர் தங்கள் வசம் உள்ள பழைய பட்டுச்  சேலையை கோ​ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மாற்றி ரூ.10,000/- மதிப்பில் புதிய சேலை வாங்கினால் பழைய சேலையின் மதிப்பு ரூ.1,000/-​ என   மதிப்பிடப்படும்.               வரும் ஆவணி மாதம் திருமண மாதம் ஆதலால் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய பட்டுச் சேலையை  கொடுத்து புத்தம் புதிய பட்டு சேலையை அதிக  தள்ளுபடியுடன் பெறும் நோக்கில் இத்திருமண காலத்தில் இத்திட்டம்  ஏற்படுத்தப்பட்டுள்ளது.            

இந்த விழாவிற்கு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் கோ. சந்தானம், தலைமை வகித்தார்கள். கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர்  மற்றும்  கோ​ஆப்டெக்ஸ் தனி அலுவலர்  மேலாண்மை இயக்குநர்  வெ.பழனிகுமார்,  முன்னிலை வகிக்தார்.

இந்த விழாவில் கலந்துகொண்டு, விற்பனையை துவக்கி வைத்த கைத்தறி  மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  மற்றும் அரசு துறை அலுவலர்கள் மற்றும்  நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக வாடிக்கையாளர்கள் கைத்தறி ஆடைகளை அதிக அளவில் வாங்கி உபயோகப்படுத்திட வேண்டுமாய் பொது மக்களையும் மற்றும் வாடிக்கையாளர்களையும் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்