முக்கிய செய்திகள்

மியாமி ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி லியாண்டர்-மகேஸ் ஜோடிக்கு பட்டம்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
Mahesh-Bhupathi-and-Leander-Paes

 

மியாமி, ஏப். - 4 - அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற சோனி எரிக்சன் இரட்டையர் டென்னிஸ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஸ்பூபதி இணை பட்டத்தை கைப்பற்றியது.  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று இந்திய அணி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் மியாமி நகரில் ஏ.டி.பி. தரவரிசை போட்டியில் இந்திய டென்னிஸ் இரட்டையர்களான லியாண்டர் பயஸ் மற்றும் மகேஸ் பூபதி இணை பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

மியாமி நகரில் டென்னிஸ்  தரவரிசையில் முன்னணியில் உள்ள டென்னிஸ் இரட்டையர்களுக்கான ஏ.டி.பி. தரவரிசை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய டென்னிஸ் இரட்டையர் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான லியாண்டர் பயஸ்  மற்றும் மகேஸ்பூபதி ஆகியோர் பட்டத்தை கைப்பற்ற களமிறங்கினர். சமீபத்தில்தான் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து களமிறங்கி வருகின்றனர். துவக்கத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடும்போது டென்னிஸ் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 இணையாக இவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீண்டகாலம் இவர்கள் வெவ்வேறு இணையுடன் களமிறங்கி போட்டிகளில் விளையாடி வந்தனர். இதன் பிறகு கடந்த ஆண்டுதான் இவர்கள் இணைந்து ஆடத் துவங்கினர். 

இந்நிலையில் மியாமி ஏ.டி.பி. டென்னிஸ்  தொடரில் 3-ம் நிலை இணையான லியாண்டர், மகேஸ் இணை, இரண்டாம் நிலை இணையான பெலாரசின் மேக்ஸ் மிர்னி மற்றும் கனடாவின் டேனியல் நெஸ்டர் இணையுடன் பட்டத்திற்கான இறுதி போட்டியில் மோதியது. இதில் கடுமையான போராட்டத்திற்கு பின் இந்திய இணை பெலாரஸ் -கனடா இணையை வென்று பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய இணை ஏ.டி.பி. தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.    

இதை ஷேர் செய்திடுங்கள்: