முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.7 - அமெரிக்க விஞ்ஞானிகளால் பெரிதும்  ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கியூரியாசிட்டி  விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடியாக வேறு கிரகங்களில்  உயிரினம் உள்ளதா என்ற கேள்வி உலக விஞ்ஞானிகள் இடையே  இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு விடை காண அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள்  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்  ஒரு பகுதியாக ஏற்கனவே இரண்டு  ரோபோ விண்கலங்களை  அமெரிக்கா ஏற்கனவே  செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.  அந்த விண்கலங்கள் மேற்கொண்ட சோதனையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்  தொடர்ந்து செவ்வாய்கிரகத்தில்  உயிரினங்கள் வாழ்வதற்கான  சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறியவும்  அது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கியூரியாசிட்டி என்ற அதி நவீன விண்கலத்தை  அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் விண்ணில் ஏவியது.

இந்த விண்கலம் 8 மாத கால விண்வெளி பயணத்திற்கு பிறகு நேற்று செவ்வாய்க்கிரகத்தில் பத்திரமாகவும் வெற்றிகரமாகவும்  தரையிறங்கியது.

இந்த அபார வெற்றியை நாசா விஞ்ஞானிகள் ஆரவாரம் செய்தும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியுடன்  கொண்டாடினர்.

இந்த கியூரியாசிட்டி விண்கலம் இந்திய நேரப்படி நேற்று  காலை 11 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் பத்திரமாக தரையிறங்கியது.

கடந்த 30 ஆண்டுகால விண்வெளி ஆராய்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் இது விண்வெளி பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என்றும் விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் கூறினர்.

மணிக்கு 21,250 கி.மீ. வேகத்தில் பயணம் செய்த இந்த விண்கலம் செவ்வாய் கிரக பகுதியை நெருங்கியதும்  பாராசூட் மூலம் மெதுவாக தரையிறங்கியது.  அப்போது  அந்த விண்கலத்தின்  6 சக்கரங்களும்  தரை பரப்பில் பதிந்து ஊர்ந்து சென்றது.

ஒரு குட்டி காரை போல 1000 கிலோ எடையில் ( 1  டன்) உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலத்திற்கு  ரூ. 250 கோடி  செலவு  செய்யப்பட்டுள்ளது.

ஓ கடவுளே செவ்வாய் கிரகத்தில்  கால் பதித்து விட்டோம் என்று  இந்த காட்சியை பார்த்து அசந்து போன விஞ்ஞானி ஒருவர் ஆர்ப்பரித்தார்.

இந்த விண்கலத்தின் பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமிரா மூலம் இந்த விண்கலம் செவ்வாயில் கால் பதித்ததையும் அதன் சக்கரங்களும் உடனடியாக படம் எடுக்கப்ப்டடு பூமிக்கு அனுப்பப்பட்டன.

செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்பு உயிரினங்கள் ஏதேனும் வாழ்ந்துள்ளனவா என்பதை கண்டறிவதற்கான ஆராய்ச்சி  சாதனங்கள்  இந்த விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

முதல் படம் பெறப்பட்ட  சிறிது நேரத்திற்கெல்லாம்  இந்த விண்கலத்தின் நிழல் செவ்வாயின் தரையில் விழுந்த படம் பெறப்பட்டது.

இந்த வெற்றி அமெரிக்காவின் ஒற்றை பெருமிதத்திற்கு உரியது என்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வர்ணித்துள்ளார்.

இதுவரை இப்படி ஒரு அதி நவீன விகலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதில்லை. அப்படிப்பட்ட விண்கலத்தை அனுப்பிய பெருமை  அமெரிக்காவுக்கே உண்டு  என்று ஒபாமா பெருமிதத்துடன்  கூறினார்.

இந்த விண்கலம் பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே உள்ள 25 கோடி கி.மீ. தூரத்தை எட்டே மாதங்களில் கடந்து  சாதனை படைத்துள்ளது.

மனிதனின் மாபெரும் அறிவியல் சாதனைகளில் இது மகத்தானது.

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் இதுவே மிகப்பெரியது.

இந்த விண்கலம் அடுத்த 2 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தை பற்றிய நுணுக்கமான ஆய்வுகளை மேற்கொல்ளும். இது  அனுப்ப இருக்கும் தகவல்களும் படங்களும் வீடியோக்களும் மனித குலத்திற்கு பல புதிய தகவல்களை கொடுக்கும்.

கியூரியாசிட்டி விண்கலத்தில் 10 வகையான அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு இக்கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ஸ்ரிட், ஆப்பர்ச்சூனிட்டி ஆகிய விண்கலங்களில் பொருத்தப்பட்டிருந்த சாதனங்களை விட இவை 15 மடங்கு அதி நவீன தொழில்நுட்பம் கொண்டவை ஆகும்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறை பகுதிகளின் வேதி தன்மைகளை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து ஆய்வு செய்யும் அதி  நவீன லேசர் கருவிகளும் கியூரியாசிட்டி விண்கலத்தில் உள்ளன.

செவ்வாய் கிரகத்தின் மண்ணை அள்ளி எடுத்து சோதனை செய்யும் நவீன ரோபோக்களும் இதில் உள்ளன.

மேலும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளுக்கு  இந்த விண்கல பயணம் ஒரு முன்னோட்டமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago