முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஏ.சி.சண்முகம் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஆரணி, ஆக.7 - ஆரணி ஸ்ரீபாலாஜிசொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்வி ஒன்றுதான் மனிதனை மாமனிதனாக்கும் என்று கல்லூரித்தலைவர் ஏ.சி.சண்முகம் பேசினார்.

ஆரணி ஸ்ரீபாலாஜிசொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், ஸ்ரீபாலாஜிசொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி நிறுவனத்தலைவருமான ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கி பேசியது,   இக்கல்லூரியில் தற்போது மொத்தம் 370 மாணவ, மாணவிகள் பட்டங்களை

பெறுகின்றனர். இதில் 75 சதவீதத்தினர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு வளாகத்தேர்வில் சுமார் 150 மாணவர்களுக்கு பணி கிடைத்து பணி செய்து வருகின்றனர். சிலர் அவர்களின் முயற்சியால் பணி செய்து வருகின்றனர். தற்போது நீnullங்கள் முன்னாள் மாணவர்கள். நீnullங்கள் வருடந்தோறும் ஒரு நாள் அனைவரும் சந்தித்து உங்களின் நட்பை பகிர்ந்துகொள்ள வேண்டும். இளமைப்பருவ நட்பை காலம் முழுவதும் தொடர

வேண்டும். இதுவரை நான் சென்னை, பெங்களூர், ஆரணியில் 25 கல்லூரிகளை நடத்தி வருகிறேன். நான் வெளிநாட்டிற்கு எங்கு சென்றாலும் ஏர்போர்ட்டில் சுமார் 2 அல்லது 3 பேராவது என்னுடைய கல்வி குழுமத்தில் படித்தவர்கள் என்னிடம் வந்து பேசுவர். எனக்கு அப்போது மகிழ்ச்சியாக இருக்கும். 

மேலும் என்னுடைய கோரிக்கை என்னவென்றால் நீnullங்கள் சுமார் 4 அல்லது 5 பேருக்காவது பணி கொடுக்கிறமாதிரி தொழில் தொடங்குங்கள். nullநீங்கள் பணியில் சேருவதைவிட 4 பேருக்காவது பணி கொடுங்கள். அதற்கான முயற்சியினை தொடங்குங்கள்.  நான் முதலில் நகராட்சியில் கிளர்க் பணியில் சேர்ந்தேன். ஒரு மாதம் சம்பளம் பெற்றேன். பின் வெளியேறி வழக்கறிஞருக்கு பயின்றேன். பின்னர் படிப்படியாக முன்னேறி இப்போது 7ஆயிரம் பேருக்கு சம்பளம் கொடுக்கிறேன். ஆரணி பகுதி கல்விக்கு சிறந்த பகுதியாக மாறி வருகிறது. கல்வி ஒன்றுதான் மனிதனை மாமனிதனாக்குகிறது. உயர்ந்த நிலையை அடைய கல்வி அவசியமானது என்றார்.

பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தர் மீர்முஸ்தபா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, தினமும் ஒரு நண்பரை சம்பாதியுங்கள், எதிரிகளை சம்பாதிக்காதீர்கள் என்று அறிவுரை வழங்கினார். மேலும் இதில் கண்ணம்மாள் அறக்கட்டளை நிர்வாகி எஸ்.லலிதாலட்சுமி, கல்லூரி செயலாளர்கள் ஏ.சி.ரவி, ஏ.சி.பாபு, கல்லூரி முதல்வர் ஆர்.இளங்கோவன், துணைமுதல்வர் வெங்கடரத்தினம், எம்.பி.ஏ. துறைத்தலைவர் கு.சிவா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்