நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவு தொடரை கைப்பற்றியது

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கிங்ஸ்டன், ஆக. 8 - நியூசிலாந்திற்கு எதிராக ஜமைக்காவில் நடைபெற்ற 2- வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-  0 என்ற கணக்கில் இந் தத் தொடரைக் கைப்பற்றியது. 

இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி தரப்பில், சாமுவேல்ஸ், மற்றும் சந்தர் பால் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்தனர். அவர்களுக்கு பக்கபலமாக, ரோச், புதாதின், கேப்டன் சம்மி, சுனி ல் நரைன் ஆகியோர் ஆடினர். 

பெளலிங்கின் போது, வேகப் பந்து வீச் சாளர் ரோச், டியோநரைன் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். அவர்களுக்கு ஆதரவாக பெஸ்ட், மற்றும் சம்மி ஆகியோர் பந்து வீசினர். 

நியூசிலாந்து அணி கேப்டன் டெய்லர் தலைமையில் மே.இ.தீவில் சுற்றுப் பய ணம் மேற்கொண்டு கேப்டன் சம்மி தலையிலான அணிக்கு எதிராக விளை யாடியது. 

இரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந் தது. இதன் 2-வது டெஸ்ட் ஜமைக்கா தீவில் கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார்க்கில் கடந்த 2 -ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. 

இதில் முதலில் களம் இறங்கிய நியூசி லாந்து அணி 82.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 260 ரன்னைஎடுத்தது. அந்த அணி சார்பில் இரண்டு வீரர்கள் அரை சதம் அடித்தனர். 

துவக்க வீரர் குப்டில் 174 பந்தில் 71 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். கேப்டன் டெய்லர் 100 பந்தில் 60 ரன் எடுத்தார். இதில் 10 பவு ண்டரி அடக்கம். தவிர, வில்லியம்சன் 22 ரன்னையும், வான் விக் 16 ரன்னையு ம், எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய மே. இ.தீவு அணி 64.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 209 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், சாமு வேல்ஸ் 169 பந்தில் 123 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் சம்மி 29 பந் தில் 32 ரன்னையும், ராம்டின் 15 ரன்னையும் எடுத்தனர். 

அடுத்து 2- வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 65.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 154 ரன்னில் சுருண்டது. ஒரு வீரர் கூட அரை சதத் தை தாண்டவில்லை.

நியூசி. அணி சார்பில், குப்டில் 58 பந்தி ல் 42 ரன் எடுத்தார். தவிர, புரவுன்லி 66 பந்தில் 35 ரன்னையும், மெக்குல்லம் 19 ரன்னையும், பிரேஸ்வெல் 14 ரன்னையு ம் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி 206 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை நியூசி. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 63.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்னை எடுத் தது.

இதனால் இந்த 2-வது டெஸ்டில் மே. இ.தீவு அணி 5 விக்கெட் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

மே.இ.தீவு அணி தரப்பில் சாமுவேல் ஸ் 103 பந்தில் 52 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். தவிர, சந்தர்பால் 43 ரன்னையும், ரோச் 41 ரன்னையும், புதாதின் 27 ரன்னையும், எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், செளதீ 30 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். தவிர, போல்ட், பிரேஸ்வெல், வாக்னர் மற்றும் வில்லியம்சன் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந் தப் போட்டியின் ஆட்டநாயகனாக சா முவேல்சும் , தொடர் நாயகனாக ரோ ச்சும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: