ஆடவர் தொடர் ஓட்டம்: பகாமாஸ் தங்கம் வென்று சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், 12 - லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 1600 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பகாமாஸ் அணி தங்கம் வென்று சாதனை படை த்து உள்ளது. இந்தப் போட்டியில் பகாமாசைச் சேர்ந்த கிறிஸ்பிரவுன், பிந்தர், மைக்கேல் மாத்யூ, மில்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் பந்தய தூரத்தை 2.52.66 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றனர். வெள்ளிப் பதக்கம்அமெரிக்காவுக்கும், வெண்கலப் பதக்கம் டிரினிடாட்டிற்கும் கிடைத்தது. ஆடவருக்கான போல் வால்ட்டில் பிரான்சின் ரெனாட் லாவினின் 5.97 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார். ஜெ மனியின் ஓட்டோ 5.91 மீ தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், அதே நாட்டின் ரபேல் வெண்கலமும் வென்றனர். 

மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க குழு தங்கம் வென்றது. டியானா, அலிக்சன் பெலிக்சன், பயான்கா, ஹர்மிலிட்டா ஆகியோர்அடங்கிய குழு பந்தய தூரத்தை 40.82 வினாடிகளில் கடந்தனர். இதற்கு முன்னதாக 1985 ம்ஆண்டு நடந்த போட்டியில் கிழக்கு ஜெர்மனி வீராங்கனைகள் பந்தய தூரத்தை 41.37 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை அமெரிக்க குழுவினர் முறியடித்து புதிய சாதனை படைத்து உள்ளனர். 

வெள்ளிப் பதக்கத்தை ஜமைக்கா குழுவினரும், வெண்கலப் பதக்கத்தை உக்ரைன்  வீராங்கனைகளும் பெற்றனர். ஜமைக்கா குழுவினர் இந்த தூரத்தை 41. 41 வினாடியிலும், உக்ரைன் குழுவினர் 42.04 வினாடியிலும் கடந்தனர்.ஆடவருக்கான 74 கிலோ மல்யுத்தப் போட்டியில் அமெரிக்க வீரர் ஜோர்

டான் புரூக்ஸ் தங்கம் வென்றார். இறுதிச் சுற்றில் அமரிக்க வீரர் ஈரான் நாட்டைச் சேர்ந்த சதிக்கை வீழ்த்தி

னார். பாய்மரப் படகு போட்டியில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜோ - அலேக் ஒலிபியா ஜோடி தங்கம் வென்றது. இதே பிரிவில் ஆடவர் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மாத்யூ - மால்கம் பேஜ் ஜோடி தங்கம் வென்றது. ஆடவருக்கான 55 கிலோ மல்யுத்தப்போட்டியில் ரஷ்யாவின் ஹமால் 5- 3 என்ற கணக்கில் ஜார்ஜியாவின் விளாடிமிரை தோற்கடித்து தங்கப் பதக்கத்

தை கைப்பற்றினார். மகளிருக்கான் சங்கிலி குண்டு எறியும் போட்டியில் ரஷ்யாவின் தத்தியானா  லைசென்கோ 78.18 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். போலந்தின் அனிட்டா 77,.60 தூரம் எறிந்து வெள்ளியையும், ஜெர்மனியின் ஹைட்லர் 77.12 தூரம் எறிந்து வெண்கலமும் வென்றனர். மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் துருக்கியின் அஸ்லி ஹகிர் பந்தய தூர

த்தை 4.10.23 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். சக நாட்டைச் சேர்ந்த புளூட் வெள்ளியும், பக்ரைனின் மரிய

ம் யூசுப் ஜமால் வெண்கலமும் வென்றனர். 

மகளிருக்கான  5,000 மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் மெசர்ட் டிபார் பந்தய தூரத்தை 15.04.23 வினாடிகளில் கடந்து தங்கத்தை வென்றார். கென்யாவின் விவியன்செரியோட் வெள்ளிப் பதக்கமும், துருக்கியின்  டிபாபா வெண்கலமும் வென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: