முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பேச்சால் வந்தது விணை அசாம் காங்கிரஸ் கூட்டணியில் பிளவு

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

கோக்ராஜ்ஹர்,ஏப்.- 8 - அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் திடீரென்று பிளவு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்த போடோலாண்ட் மக்கள் முன்னணியானது அசாம் கனபரிஷத்தையும் பாரதிய ஜனதாவையும் ஆதரிப்போம் என்று அறிவித்துள்ளது.  அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் போடோலாண்ட் மக்கள் முன்னணியும் கூட்டணி அமைத்துள்ளது. அங்கு முதல்கட்டமாக கடந்த 4-ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 45 தொகுதிகள் வரை காங்கிரஸ் வெற்றிபெறும் என்று அந்த கட்சியின் முதல்வர் தரூண் கோகாய் கூறினார். அதோடு நின்றுவிடாமல் அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்றும் தனித்தே அரசு அமைக்கும் என்றும் கூறினார். இதனால் கூட்டணி கட்சியான போடோலாண்ட் மக்கள் முன்னணி படுகோபம் அடைந்தது. அதோடுமட்டுமல்லாது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளது. இரண்டாவது கட்டமாக 64 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் அசாம் கன பரிஷத் கட்சியையும் பாரதிய ஜனதா கட்சியையும் ஆதரிக்கப்போவதாக போடோலாண்ட் மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தலில் 45 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று காங்கிரஸ் கூறியிருப்பது வெறும் கற்பனையானது என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் போடோலாண்ட் மக்கள் முன்னணியானது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது என்று முதல்வர் தரூண் கோகாய் தெரிவித்துள்ளார். எங்கள் இரண்டு கட்சிக்கும் கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறினார். இரண்டாவது கட்ட தேர்தலின்போது நடக்கும் தொகுதிகளில் போடோலாண்ட் மக்கள் முன்னணிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்