முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: விஜேந்தர் பங்கேற்பு

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 11 - அடுத்த வருடம் நடக்க இருக்கும் உலக குத்துச் சண்டைப் போட்டியின் ஹெவி வெயிட் பிரிவில் இந்திய நட்சத்திர வீர ரான விஜேந்தர் சிங் பங்கேற்கிறார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஏமா ற்றம் அளித்த விஜேந்தர் சிங்கிற்கு தற் போது நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அவர் தனது திறமையை நிரூபிக்க வே ண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் 81 கிலோ லைட் ஹெ வி வெயிட் பிரிவில் சிங் கலந்து கொள் கிறார். 

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனி ல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30-வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இத ன்  காலிறுதியில் இந்திய வீரர் விஜேந் தர் தோல்வி அடைந்தார். 

உலக குத்துச் சண்டைப் போட்டி குறித் து அவரிடம் கேட்ட போது, இந்த வரு டம் முக்கியமான போட்டிகல் எதுவும் கிடையாது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலக சாம்பியன்ஷிப்பில் பங் கேற்பேன் என்றார் அவர். 

6 அடி உயரமுள்ள விஜேந்தர் சிங்கிற்கு கடந்த ஒலிம்பிக் போட்டி வெற்றிகர மாக அமைந்தது. இதில் 75 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர் வெ ண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். தவிர, உலக சாம்பியன்ஷிப் பிலும் வெண்கலம் வென்றார். 

2009 -ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டி முடிந்ததும் 26 வயதான விஜேந்தர் 75 கிலோ எடைப் பிரிவில் உலக நம்பர் - 1 வீரர் ஆனார். 

அரியானாவைச் சேர்ந்த முன்னணி வீர ரான விஜேந்தர் தொடர்ந்து 5 வருடங்களாக தேசிய போட்டியில் பங்கேற்கவி ல்லை. ஆனால் வரும் 30-ம் தேதி முத ல் நவம்பர் 4-ம் தேதி வரை ஐதராபாத் தில் நடக்க இருக்கும் தேசிய போட்டி யில் பார்வையாளராக சிங் கலந்து கொள்கிறார். 

இது குறித்து அவரிடம் கேட்ட போது, தேசிய போட்டியில் நான் பங்கேற்கவி ல்லை. ஆனால் போட்டிகளைப் பார் வையிடுவேன். தவிர, துவக்க விழாவி லும் கலந்து கொள்வேன் என்றார் அவர். 

பீப்பிள் பார் தி எத்திகல் டிரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ் (பெடா) நிறுவனம் சார்பில் சர்க்கசில் பிராணிகள் பயன்ப டுத்தப்படுவதற்கு எதிராக டாக்குமெ ண்டரி படம் தயாராகிறது. இதில் ஷூ  ட்டிங்கில் கலந்து கொள்ள விஜேந்தர் டெல்லி பள்ளி ஒன்றிற்கு சென்று இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்