முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகமதாபாத் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பாலோ ஆன் ஆனது

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அகமதாபாத், நவ. 18 - இந்தியாவிற்கு எதிராக அகமதாபாத்தி ல் நடைபெற்று வரும்  முதல்  கிரிக்கெ ட்  டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இந்திய அணி  சார்பில்  சுழற் பந்து வீச் சாளர்கள்  பிரக்ஞான் ஓஜா மற்றும் அ ஸ்வின் இருவரும் வெகு நேர்த்தியாக பந்து வீசி இங்கிலாந்தின்  முக்கிய  விக் கெட்டுகளை கைப்பற்றினர். 

ஓஜா மற்றும் அஸ்வின் ஆகியோரது சிறப்பான பந்து  வீச்சால் இங்கிலாந்து அணி ரன் எடுக்க  திணறியது. இறுதியி ல் பாலோ ஆன் ஆனது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள சர்தார்படேல் அரங்கத்தில் கடந்த 15-ம் தேதி முதல் நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 160 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்னை எடுத்தது. இந்திய அணி சார்பில் 1 வீரர் இரட்டை சதமும், 1 வீரர் சதமும் அடித்தனர். 

புஜாரா இரட்டை சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 389 பந்தில் 203 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். சேவாக் 117 பந்தில் 117 ரன் எடுத்தார். தவிர, யுவராஜ்சிங் 151 பந்தில் 74 ரன்னையும், காம்பீர் 111 பந்தில் 45 ரன்னையும், அஸ்வின் 23 ரன்னையும் எடுத்தனர்.

பின்பு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய சுழற் பந்து வீச்சை சமா ளிக்க முடியாமல் திணறியது. இறுதியி

ல் அந்த அணி 74.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன்

குக், கீப்பர் பிரையர் ஆகிய இருவர் மட்டுமே தாக்குப் பிடித்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

கீப்பர் பிரையர் அதிகபட்சமாக 100 பந்தில் 48 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். கேப்டன் குக் 109 பந்தில் 41 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். தவிர, துணைக் கேப்டன் பிராட் 23 பந்தில் 25 ரன்னையும், பிரஸ்

னன் 19 ரன்னையும், பீட்டர்சன் 17 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 69 ரன்னிற்கு 5 விக்கெட்டை இழந்து திணறிக் கொண்டு இருந்தது. பின்பு பிரைய

ர், பிரஸ்னன்,மற்றும் பிராட் ஆகியோரது ஆட்டத்தால் அந்த அணி குறைந்த ஸ்கோரில் இருந்து தப்பியது. 

இந்திய அணி சார்பில் இடது கை சுழற் பந்து வீச்சாளரான ஓஜா 45 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் அவர் 4 - வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். 

அவருக்கு ஆதரவாக பந்து வீசிய அஸ்வின் 80 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ஆனால் ஓஜாவை விட இவர் அதிக ரன் கொடுத்து விட்டார். தவிர, ஜாஹிர்கான் மற்றும் யாதவ் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி பாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து 2- வது இன்னிங்சை ஆடியது. 3-வது நாள் ஆட்ட நேர முடி

வில்  அந்த அணி விக்கெட் இழப்பின்றி 38 ஓவரில் 111 ரன் எடுத்து இருந்தது. அப்போது, கேப்டன் குக் 124 பந்தில் 74 ரன்னுடனும், காம்ப்டன் 104 பந்தில் 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தற்போது 219 ரன் பின்தங்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்