முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆ.வுக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்., 485 ரன் குவிப்பு

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அடிலெய்டு , நவ. 23 - தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அடிலெய்டு நகரில் நேற்று துவங்கிய 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னி ங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 485 ரன் னை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சில் கேப்டன் மைக்கேல் கிளார்க் இரட்டை சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்ச மாகும். தவிர, துவக்க வீரர் வார்னர் மற்றும் ஹஸ்சே ஆகியோரும் சதம் அடித்ததால் அந்த அணி பிரமாண்ட மான ஸ்கோரை நோக்கி செல்கிறது. 

தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் கிரீ ம் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலி யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலை மையிலான அணிக்கு எதிராக விளை யாடி வருகிறது. 

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக் கா அணிகளுக்கு இடையே 5 போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதன் 2-வது டெஸ்ட் அடிலெய்டு ஓவல் நகரில் நேற்று துவங்கி யது. 

முன்னதாக டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தே ர்வு செய்தது. அந்த அணி சார்பில் வார் னர் மற்றும் கோவன் இருவரும் ஆட்ட த்தை துவக்கினர். 

ஆஸ்திரேலிய அணி இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன் னிங்சில், 86.5 ஓவரில் 5 விக்கெட் இழப் பிற்கு 485 ரன்னை எடுத்தது. 

கேப்டன் மைக்கேல் கிளார்க் இரட்டை சதம் அடித்தது நேற்றைய ஆட்டத்தின் ஸ்பெசலாகும். அவர் 243 பந்தில் 224 ரன்னை எடுத்தார். இதில் 39 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

முன்னதாக துவக்க வீரர் வார்னர் 112 பந்தில் 119 ரன்னை எடுத்தார். இதில் 16 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் மார்கெல் வீசிய பந் தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார். 

மூத்த வீரரான மைக் ஹஸ்சே 137 பந்தி ல் 103 ரன்னை எடுத்தார். இதில் 9 பவு ண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். இறு தியில் அவர் ஸ்டெயின் வீசிய பந்தில் கிளீன் போல்டானார். 

வார்னரும், கிளார்க்கும் இணைந்து 4-வது விக்கெட்டிற்கு 155 ரன் சேர்த்தனர். பின்பு ஹஸ்சேவும், கிளார்க்கும் இணைந்து 5-வது விக்கெட்டிற்கு 272 ர ன் சேர்த்தனர். 

ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 55 ரன்னிற்கு 3 விக்கெட்டை இழந்து தடு மாறிக் கொண்டு இருந்தது. பின்பு வா ர்னர் மற்றும் கிளார்க் இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

தென் ஆப்பிரிக்கா சார்பில், காலிஸ் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, மார்கெல் 2 விக்கெட்டும், ஸ்டெயின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்