முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல்சார் வாரியத்தின் தொகை முதல்வரிடம் வழங்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.25 - தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தமிழக அரசின் நில வாடகை பங்குத் தொகை 5 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரத்து 313 ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதாவிடம் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் வழங்கினார்.  

தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதாவிடம்  22.11.2012 அன்று தலைமைச் செயலகத்தில், 2011​- 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தமிழக அரசுக்கான நில வாடகை பங்குத் தொகையான 5 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரத்து 313 ரூபாய்க்கான காசோலையினை  நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வழங்கினார்.

2011-12 ஆம் ஆண்டில், 22 சிறுதுறைமுகங்கள் வாயிலாக சுமார் 12.10 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டு,  அதன் மூலம் துறைமுக மற்றும் சரக்கு தீர்வையாக சுமார் 8 கோடியே 67 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.  இத்துடன் இதர வருவாய் இனங்களையும் சேர்த்து தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் மொத்த வருவாய் 

26 கோடியே 35 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. 

இத்தொகையிலிருந்து, 2011​- 2012 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசுக்கான நில வாடகை பங்குத் தொகையான 5 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரத்து 313 ரூபாய்க்கான  காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் 22.11.2012 அன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலர் / துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்