முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி ஆஜர்

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.6 - பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. நேரில் ஆஜரானார். பொள்ளாச்சி நடுவர் nullதிமன்றத்தில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆஜராகி முன்னாள் திமுக நகர செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக  சாட்சியம்.

கடந்த 10.12.2006 அன்று அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆணையின்படி கோவை அ.இ.அ.தி.மு.க புறநகர் மாவட்டம் சார்பில் பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில் அன்றைய ஆளும் திமுக கட்சியினை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில்  சுமார் இரவு 7.15 மணியளவில் கூட்டத்தை தடுத்து சீர்குழைக்கும் நோக்கத்தோடு திமுக கட்சியை சார்ந்த ரவுடி கும்பல்கள் சிலர் கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் மீது கற்களை வீசி தாக்கினர். 

இதில் காயமடைந்தவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கூட்டத்தில் இருந்த காவல்துறையினருக்கு தெரிந்து நடவடிக்கை மேற்கொள்ளாததால். காவல் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட எஸ்.எஸ்.சந்திரன் இரவு 10.15 மணியளவில் உரையாற்றும் போது மீண்டும்  அன்றைய ஆளும் திமுக கட்சியின் பொருப்பாளர் தென்றல் செல்வராஜ், வி.பி. சந்திரசேகர் முன்னாள் , திமுக கவுன்சிலர்கள், இஸ்மாயில் ஆரூன், சீராஜ்ரூதின் ஆகியோருடன் சேர்ந்து 30 பேர் கொண்ட திமுகவை சார்ந்த ரவுடிகும்பல் வன்முறையில் ஈடுபட்டு கூட்ட மைதானத்தில் இருந்த கழக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மீது கல்வீசி தாக்கியும், 20 டியூப்லைட்கள் மற்றும் கார்களின் கண்ணாடிகளை உடைத்து அடித்து நொறுக்கியும், பொதுமக்களையும், அ.இ.அ.தி.மு.க தொண்டர்களையும் இதுபோன்ற கூட்டத்திற்கு வந்தால் உயிரோடு யாரும் திரும்பமாட்டீர்கள் என அச்சுறுத்தினார்கள். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறையில் 11.12.2006 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு பொள்ளாச்சி நடுவர் nullதிமன்ற எண்.1-ல் நடைபெற்ற விசாரணையில் அ.இ.அ.தி.மு.கழகம்  சார்பில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்