முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் 11,08,256 நபர்களுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டஅடையாள அட்டை

செவ்வாய்க்கிழமை, 1 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

திண்டுக்கல், ஜன.- 2 - திண்டுக்கல் மாவட்டத்தில் 11 லட்சத்து 8 ஆயிரத்து 256 உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு மெருன், சாம்பல் நிற அட்டை வழங்க எல்காட் நிறுவனம் மூலம் பணிகள் துவங்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் பதவியேற்றவுடன் உழவர் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள் அனைவருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் தற்காலிக அடையாள அட்டை (டோக்கன்)வழங்க உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கப்பட்டது. தற்போது முழுவதுமாக மாவட்டம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டு இம்மாவட்டத்தில் மட்டும் 11,08,256 தகுதி பெற்ற பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்ட 65 வயதிற்குட்பட்ட தகுதியானவர்களுக்கு நிரந்தர உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த அட்டை வழங்குவதற்கு முன்பாக எல்காட் நிறுவனம் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உள்ளவர்கள் விபரங்கள் கணிணி பதிவு செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் பார்வையிட்டு பின்னர் தெரிவிக்கையில், தமிழக முதல்வர் அவர்கள் கருவறை முதல் கல்லறை வரை அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி இதுநாள் வரை திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிகமாக வழங்கப்பட்ட உழவர் அட்டை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயனடையும் பயனாளிகள் முழுமையாக கணக்கெடுக்கும் பணி முடிவடைந்துள்ளது. அதன்படி 11,08,256 பயனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு நிரந்தரமாக அட்டை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடும்பத் தலைவர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட 65 வயதிற்கு உட்பட்ட தகுதியானவர்களுக்கு மெருன் கலரிலும், இதர குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிற கலரிலும் அடையாள அட்டை வழங்க தமிழக முதலமைச்சர் உத்தவவிட்டுள்ளார். எனவே அவர்களைப் பற்றிய விபரங்கள் கணிணியில் ஏற்றி உழவர் பாதுகாப்பு அட்டை தயார் செய்வது முக்கியப் பணியாகும். இந்தப் பணியை எல்காட் நிறுவனம் ஏற்று உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளின் விபரங்களை பதிவு செய்யும் பணியை திண்டுக்கல் மாவட்ட எல்காட் மேலாளர் தியாகராஜன் தலைமையில் இப்பணி நடைபெற துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப்பணி தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெறும். பிப்ரவரி மாதத்திற்குள் இந்தப்பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தப்பணியில் ஈடுபட்டிருக்கும் எல்காட் நிறுவனம் குறித்த காலத்தில் முடித்து உழவர்களுக்கு அட்டைகள் வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மனோகரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரசீத் அலி, மாவட்ட எல்காட் மேலாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்