கங்குலி சாதனையை முறியடிக்க தயாராகிறார் டோணி

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

மாஹாலி: ஜன. - 23 -  ஒரு கேப்டனாக அதிக அளவிலான ஒரு நாள் போட்டிகளை வென்று கொடுத்த 2வது கேப்டனாக திகழும் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்கப் போகிறார் தற்போதைய கேப்டன் எம்.எஸ்.டோணி. ஒரு நாள் போட்டிகளில் இந்திய கேப்டன்களிலேயே வெற்றிகரமானவராக திகழ்ந்த சாதனைக்குரியவர் முகம்மது அசாருதீன்தான். 174 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய அவர் 90 போட்டிகளை வென்றெடுத்தவர். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் கங்குலி. இவர் 146 போட்டிகளில் கேப்டனாகப் பணியாற்றி 76 போட்டிகளில் வென்றார், 65 போட்டிகளில் தோல்வியுற்றார். இந்த சாதனையை தற்போது முறியடிக்கவுள்ளார் டோணி. இதுவரை 133 போட்டிகளில் கேப்டனாகப் பணியாற்றியுள்ளார். இதில் 76 போட்டிகளில் வென்று கங்குலியை சமன் செய்துள்ளார். நாளை மொஹாலியில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்றால் டோணி கங்குலியின் சாதனையை முறியடிக்கலாம். ஒரு வேளை நாளைய போட்டியில் இந்தியா வெல்லாவிட்டால் இங்கிலாந்துடனான கடைசிப் போட்டி வரை டோணி காத்திருக்க வேண்டும்.    

இதை ஷேர் செய்திடுங்கள்: