மாணவி கற்பழிப்பு வழக்கு:ஜப்பான் ஒலிம்பிக் வீரருக்கு சிறை தண்டனை

ஞாயிற்றுக்கிழமை, 3 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

டோக்கியோ, ஜன. - 4 - ஜப்பானில் கல்லூரி மாணவியை கற்பழித்த வழக்கில் ஒலிம்பிக் பதக்க வீரருக்கு ஜப்பான் நீதிமன்றம் 5 ஆண்டுசிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஜப்பானின் ஜூடோ வீரர் மஸாத்தோ உசிஸ்ஷிபா (33), இவர் 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும், 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். இவர் தற்போது ஜப்பான் நாட்டு ஜூடோ விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய பயிற்சியாளராக இருக்கிறார். இவர் குய்ஷூகூ பல்கலைகழகத்தில் ஜூடோ பயிற்சி பெற்று வந்த 19 வயது மாணவியை கடந்த 2011-ம் ஆண்டு,டோக்கியோவில் ஹோட்டல் ஒன்றில் மது குடிக்க வைத்து போதை மயக்கத்தில் இருந்த போது கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. இவர் மீது டோக்கிய?? ?கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று நடந்த விசாரணையில் உசிஸ்ஷிபாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ?அப்பீல் செய்ய உள்ளதாக மஸாத்தோ உசிஸ்ஷிபா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: