முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனை அடையாளம் கண்டு கொல்வதில் சிரமம்

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,பிப்.14 - அல்கொய்தா தீவிரவாத தலைவன் ஒசாமா பின்லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சுட்டுக்கொல்வது கடினமான காரியமாக இருந்தது என்று அமெரிக்க ராணுவ அமைச்சர் லியோன் பெனட்டா தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்க தலைவன் பின்லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க அமெரிக்க ராணுவமும் அந்தநாட்டு புலனாய்வு பிரிவும் சேர்ந்த பெரும் முயற்சிகளை எடுத்தன. பல ஆண்டுகள் தேடுதல் வேட்டையில் பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் ராணுவ பயிற்சி மையம் அருகே உள்ள ஒரு மாடி வீட்டில் அவன் குடும்பத்துடன் வசிப்பது தெரியவந்தது. ஆனால் அந்த வீட்டில் இருந்தது பின்லேடன்தான் என்பதை 100 சதவீதம் உறுதி செய்யமுடியவில்லை என்று அப்போது அமெரிக்க புலனாய்வு இயக்குனர் பெனட்டா தெரிவித்துள்ளார். பின்லேடனை சுட்டுக்கொல்வதில் பெனட்டா முக்கிய பங்கு வகித்துள்ளார். பெனட்டாவை அதிபர் ஒபாமா, ராணுவ அமைச்சராக நியமித்துள்ளார். புலனாய்வு துறையினர் தகவலின்படி அந்த வீட்டில் மறைந்திருந்தது பின்லேடன்தான் என்பதை நாங்கள் முழுமையாக நம்பவில்லை. இறுதியில் அவனை சுட்டுக்கொன்றோம். அவனது உடலை எடுத்துச் சென்று பார்த்தபோதுதான் அவன் பின்லேடன் என்பது உறுதியானது. பின்லேடனின் நெற்றியில் முதலில் சுடப்பட்டது. அதில் அவன் நிலைகுலைந்துபோனான். பின்லேடன் பதுங்கி இருந்த வீட்டை சுற்றிலும் எங்கள் ராணுவம் நிறுத்தப்பட்டு 15 வினாடிகளில் பின்லேடனை சுட்டு உடலை விமானத்தில் எடுத்துச்சென்றுவிட்டோம் என்றும் பெனட்டா கூறினார். எங்கள் ராணுவத்தை பார்த்த பின்லேடன் தன் கடைசி மனைவியை கேடயமாக பயன்படுத்த பின்லேடன் முயன்றான் என்று பெனட்டா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்