முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடரைக் கைப்பற்றுமா?

புதன்கிழமை, 13 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, மார்ச். 14 - இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையேயான 3 -வது கிரிக்கெ ட் டெஸ்ட் போட்டி மொகாலி நகரில் இன்று துவங்க இருக்கிறது. ஆஸி.க்கு எதிரான இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிக ர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே 2 டெஸ்டுகள் முடிந் து விட்டன. 

முன்னதாக நடந்த முதல் 2 டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் அசைக்க முடியாத முன்னி லை பெற்று உள்ளது. 

சென்னையில் நடைபெற்ற முதல் டெ ஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. பின்பு ஐத ராபாத்தில் நடந்த 2-வது டெஸ்டில்  இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 135 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா அணியின் பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டும் வலுவாக உள்ள து. எனவே ஆஸி. அணி இந்தத் தொட ரில் திணறி வருகிறது. 

கடந்த டெஸ்டில் விஜய் சதம் அடித்தா ர். இதன் மூலம் அவர் இந்தத் தொடரில் நிலையான இடத்தைப் பிடித்து உள்ளார். சேவாக் நீக்கப்பட்டதால் ஷிகார்  தவான் விஜயுடன் துவக்க வீரராக இற ங்கலாம் என்று தெரிய வருகிறது. 

இந்திய அணி தரப்பில், புஜாரா, விஜ ய், டெண்டுல்கர், கேப்டன் தோனி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையி ல் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கோக்லி உள்ளார். மிடில் ஆர்டர் வலு வாக உள்ளது. 

கேப்டன் தோனி முதல் டெஸ்டில் இர ட்டை சதம் அடித்தார். இதன் மூலம் கடந்த 2 வருடமாக நிலவிய ரன் வறட்சியை அவர் போக்கினார். புஜாரா 2-வது  டெஸ்டில் இரட்டை சதம் அடித் தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் களான அஸ்வின், ஹர்பஜன் சிங் , ஜடேஜா ஆகியோர் நன்கு பந்து வீசி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக புவனேஷ்வர் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பந்து வீசி வருகின்ற  னர். 

எனவே மொகாலியில் நடக்க இருக்கு ம் 3 -வது டெஸ்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைக் குமா என்ற கேள்வி அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் 4 வீரர்கள் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது அந்த அணிக்கு பின்னடைவாகும். 

வேகப் பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் பட்டின்சன், ஆல்ர வுண்டர் ஷேன் வாட்சன், கவாஜா ஆகி ய 4 வீரர்கள் மொகாலி டெஸ்டில் விளையாட முடியாது. அணி நிர்வாகம் மே ற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மை க்கேல் கிளார்க் நன்கு பேட்டிங் செய்து வருகிறார். எனவே இந்தத் தொடரில் அவருக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது. 

துவக்க வீரர்களான எட்கோவன் , வார் னர் மற்றும் பில் ஹியூக்ஸ் ஆகியோர் மோசமான நிலையில் உள்ளனர். கீப்ப ர் வாடே உடற்தகுதி பெறாத பட்சத்தி ல் ஹாடின் இடம் பெறலாம். 

ஆஸி. அணியில் வேகப் பந்து வீச்சிற்கு சிட்லே, ஸ்டார்க் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் உள்ளனர். சுழற் பந்து வீச்சி ற்கு லியான் மற்றும் டொகெர்டி ஆகி யோர் உள்ளனர். 

இந்திய அணி : - தோனி (கேப்டன்), முரளி விஜய், ஷிகார் தவான், டெண்டுல்கர், புஜாரா, விராட் கோக்லி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, ஓஜா, அசோக் திண்டா மற்றும் ரகானே ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்