முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி

புதன்கிழமை, 8 மே 2024      விளையாட்டு
Delhi-Capitals 2024-03-23

Source: provided

டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.

ராஜஸ்தான் பந்துவீச்சு...

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் ப்ரேசர்-மெக்கர்க் மற்றும் அபிஷேக் பொரேல் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ப்ரேசர்-மெக்கர்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அஷ்வின் அபாரம்...

இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக பொரேல் 65 ரன், ப்ரேசர் மெக்கர்க் 50 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் பட்லர் 19 ரன்களிலும் அவுட்டானார்கள். பின்னர் சாம்சன் மற்றும் ரியான் பராக் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதிரடியாக விளையாடிய சாம்சன் 86 ரன்களிலும் பராக் 27 ரன்களிலும் அவுட்டானார்கள். பின்னர் தொடர்ந்து விக்கெட்டுகள் விழத்தொடங்கின.

சாம்சன் 86 ரன்கள்...

முடிவில் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சாம்சன் 86 ரன்களும் ரியான் பராக் 27 ரன்களும் சுபம் துபே 25 ரன்களும் எடுத்தனர். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், கலீல் அஹமது மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

சாம்சன் புதிய சாதனை

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐ.பி.எல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் 6 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் குறைந்த இன்னிங்சில் 200 சிக்சர்களை விளாசிய இந்திய வீரர் என்ற வராலாற்று சாதனையை சாம்சன் படைத்துள்ளார். சாம்சன் 159 இன்னிங்சில் 200 சிக்சர்கள் அடித்துள்ளார். இதுவரை முதல் இடத்தில் இருந்த டோனி (165 இன்னிங்ஸ்) 2ம் இடத்திற்கு சரிந்துள்ளார். இந்த பட்டியலில் 3ம் இடத்தில் விராட் கோலி (180 இன்னிங்ஸ்), 4ம் இடத்தில் ரோகித் சர்மா (185 இன்னிங்ஸ்), 5ம் இடத்தில் சுரேஷ் ரெய்னா (193 இன்னிங்ஸ்) உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து