எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம், ஏப்.28 - தமிழகத்தின் பல பகுதிகளில் ஏராளமானோர்களிடம் ஆசிரியர், வி.ஏ.ஓ., சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய்களை சுருட்டிய மதுரை மோசடி மன்னன், எங்கும் ஆவணங்களை கொடுக்காமலும், தடயங்களை விட்டுச்செல்லாமல் சாமர்த்தியமாக மோசடிகளை அரங்கேற்றி தலைமறைவாகி வந்துள்ளார். இறுதியாக மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரிலும் மோசடி செய்து தலைமறைவான மோசடி மன்னன் அவரது மனைவி, மைத்துனர் போட்டோக்கள் கிடைத்ததால் அவரின் தொடர் மோசடிக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
கோவை தொப்பம்பட்டியைச்சேர்ந்த விவேகானந்தன் வெறும் 9ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிருந்தாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ராகுல், மதுஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் பிருந்தாவின் சகோதரர் கெவினும் உள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவரிசை காட்டி வந்த விவேகானந்தன் குடும்பத்தினர் ஒரு இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தது இல்லை. அதற்குள் அப்பகுதியில் ஏமாந்தவர்களிடம் கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம்.
ஒரு பகுதியில் குடியேறும் போது அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பவராக தேடுவார். அவர்களிடம் தான் மிகப்பெரிய செல்வந்தர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தனக்கு தொழில்கள் இருப்பதாக கூறி, உங்களது வீடு வாடகைக்கு வேண்டும். வாடகை எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. எனது குடும்பத்தினர் வசதியாக வாழ்பவர்கள் என கூறுவார். வீட்டின் உரிமையாளர் கேட்கும் வாடகையை காட்டிலும் கூடுதலாக 5மடங்கு தருவதாகவும் வீடு வசதியாக இருக்கவேண்டும் என அடக்கமாகவும், அமைதியாகவும் கோரிக்கை வைப்பாராம். விவேகானந்தனின் நடவடிக்கைகளை பார்க்கும் வீட்டின் உரிமையாளர், அவர் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர், சாந்தமானவர், வசதியானவர் என நம்பி வீட்டை வாடகைக்கு கொடுத்து விடுவர்.
வீட்டில் குடியேறும் விவேகானந்தன் அருகில் வசிப்பவர்கள் தன்னை மிகப்பெரிய செல்வந்தன் என நம்ப வேண்டும் என்பதற்காக, வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு தனது சொந்த செலவிலேயே சில மாறுதல்களை செய்து கொள்வார். விவேகானந்தரிடம் உள்ள பல சொகுசு கார்களில் தினமும் நேரத்திற்கு ஒரு கார்களில் சென்றுள்ளார். இதன்மூலம் அந்தந்த பகுதியில் பலரிடமும் நண்பர் போல் பழகி அவர்கள் மூலமாக பலரது நட்பையும் பெற்றுவிடுவது விவேகானந்தனின் வழக்கம். பழகியவர்களிடம் தனக்கு கணக்கில்லாத சொத்துக்கள் இருப்பதாகவும் அரசியல் பெரும் புள்ளிகளுடன் நெருங்கிய பழக்கம் உண்டு என்றும், தன்னால் அரசிடம் எளிதாக காரியம் சாதிக்க முடியும் என்றும் விவேகானந்தன் ரீல் விட்டுள்ளார். மற்றவர்களிடம் இவ்வாறு பேசும் போது அவர்கள் முழுமையாக தன்னை நம்பும் வகையில் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அரசு வேலைக்கு காத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவது போலவும் நடித்துள்ளார். விவேகானந்தனின் இந்த கபட நாடகத்தை அறியாமல், எப்படியாவது தங்களுக்கு அரசு வேலை கிடைத்தால் போதும் என விவேகானந்தன் கேட்ட தொகையை கொடுத்து ஏராளமானோர் ஏமாந்துள்ளனர்.
பணம் கொடுக்கும் போது பணத்துக்கு என்ன உத்திரவாதம் என கேட்பவர்களிடம், என்னை நம்ப வில்லையா நான் உங்களுக்கு உதவ தயாராக இல்லை. நீங்கள் கொடுக்கும் பணத்தை நானா வைத்துக்கொள்ளப்போகிறேன். அரசு வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் உங்களுக்கு உதவலாம் என்று தான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு உதவி செய்ய நினைக்கும் என்மீது சந்தேகப்படுகிறீர்களே. இது எனக்கு தேவையில்லாத வேலை என மிகுந்த கோபத்துடன் வெளியில் செல்ல முற்படுவாராம். அவரது கோபத்தை கண்டு உண்மையிலேயே நல்ல மனிதர் தான் என நினைத்து எழுதி வாங்காமல் கூட பணத்தை விவேகானந்தனிடம் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள். விவேகானந்தனின் கோபமான பேச்சுகளுக்கும் செவி சாய்க்காதவர்களிடம் அவரது மனைவி பிருந்தா சென்று எனது கணவர் ஏராளமானோருக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்துள்ளார். ஏன் வீணாக சந்தேகப்படுகிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் பாதி பணத்தை இப்போது கொடுங்கள் மீதியை வேலைகிடைத்தபின்னர் கொடுத்தால் போதும் என்பாராம். அவரது ஏமாற்றுப்பேச்சை நம்பியவர்களும் விவேகானநதனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
மதுரை திருநகரில் குடியிருந்த காலங்களிலும் மோசடியில் ஈடுபட்டு வந்த விவேகானந்தன், தேர்தல் காலத்தில் தேர்தலை காரணம் காட்டியும் பல மோசடிகளில் ஈடுபட்டார். அங்குள்ள பலரிடம் வங்கியில் தங்க காசு, தங்க பிஸ்கட், பணம் கோடிக்கணக்கில் இருப்பதாகவும் தற்போது தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் அவற்றை தற்போது எடுக்கமுடியவில்லை. தனது தொழிலுக்கு உடனடியாக பணம் தேவை என பலரிடமும் ஊட்டியில் பல கோடிக்கு எஸ்டேட் வாங்க உள்ளதாகவும் அதற்கு பல லட்சம் ரூபாய் தேவையென்றும் கூறி தேர்தல் முடிந்தவுடன் பணமாகவோ, தங்கமாகவோ வங்கியிலிருந்து எடுத்து கொடுத்துவிடுவதாகவும் கூறி பல லட்சங்களை மோசடி செய்துவிட்டு விவேகானந்தனின் குடும்பத்தினர் தலைவறைவாகிவிட்டனர். மதுரை மோசடி மன்னன் விவேகானந்தன் பணத்தை பெறும்போது அதற்காக பத்திரத்திலோ, புரோ நோட்டிலோ அல்லது வெள்ளைப் பேப்பரிலோ எழுதி கையெழுத்து போட்டுக்கொடுப்பதில்லை. பெற்ற பணத்திற்கு ஆதாரமாக எதையும் கொடுக்காமல் மாட்டிக்கொள்ளாத வகையிலும் விவேகானந்தன் தெளிவாக மோசடி வேலைகளை நிறைவேற்றியுள்ளார்.
பல ஊர்களில் விவேகானந்தனிடம் ஏமாந்தவர்களில் சிலர் போலீசில் புகார் செய்திருந்தாலும் ஏராளமானோர் புகார் செய்யவில்லை. மேலும் அவர் ஊருக்கு ஊர் ஒரு பெயரை வைத்து ஏமாற்றி வந்ததால் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் சுதாரிக்க முடியவில்லை. இறுதியாக மதுரை திருநகரில் அவரது குடும்ப போட்டோ சிக்கியதால் அவை நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டது. அதனால் மற்ற பகுதியில் இருப்பவர்கள் சுதாரித்ததுடன் ஏற்கனவே விவேகானந்தனிடம் ஏமாந்தவர்கள் தற்போது போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
15 Oct 2025தென்காசி : குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு அபராதம்
15 Oct 2025துபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி
-
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா
15 Oct 2025நியூயார்க் : ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய
-
உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது
15 Oct 2025விர்ஜீனியா : உளவு பார்த்ததாக இந்திய வம்சாவளி வெளியுறவு கொள்கை நிபுணர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
என்னை தொடர்பு கொள்ளவில்லை: அஜித் அகார்கர் மீது ஷமி விமர்சனம்
15 Oct 2025மும்பை : இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தான் இடம்பெறாத குறித்து தெரிவித்துள்ள முகமது ஷமி தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர்
-
மீண்டும் அமெரிக்காவுக்கு தபால் பார்சல் சேவை
15 Oct 2025புதுடெல்லி : இந்திய தபால் துறை அமெரிக்காவுக்கான அனைத்து வகை சர்வதேச தபால் சேவைகளையும் மீண்டும் தொடங்கியுள்ளது.
-
ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் : 40 தலீபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்
15 Oct 2025இஸ்லாமாபாத் : ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றத்தால் 40 தலீபான்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2025.
16 Oct 2025 -
பாகிஸ்தான் அணி வெற்றி
15 Oct 2025தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Oct 2025சென்னை, இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டு
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு: 44,081 பேர் பயன்பெறுவர்
16 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆ
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
அவரின் தியாகம் என்றும் போற்றப்படும்: கட்டபொம்மனின் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
16 Oct 2025சென்னை, கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும் என்று அவரது நினைவு நாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
16 Oct 2025ஜகர்த்தா, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.