முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரிப் ஜூன் 2-ம் தேதி பதவியேற்பு

திங்கட்கிழமை, 20 மே 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே.21 - பதினெட்டு சுயேட்சை வெற்றியாளர்கள் இணைந்ததன் மூலம் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என் ) கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்வது உறுதியாகியுள்ளது. கடந்த 11ம் தேதி, பெரும் அச்சுறுத்தல்களுக்கிடையே பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற போதும் ஆட்சி அமைக்கத் தேவையான அளவு, அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, அது பிற கட்சிகளின் ஆதரவு வேண்டி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

தற்போது சுயேச்சை வேட்பாளர்களாக வெற்றி பெற்ற 18 எம்.பி.க்கள் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியில் இணைந்ததன் மூலம் நவாஸ் ஷெரிப்பின் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது.

ஜூன் 2-ந்தேதி பதவி ஏற்பு விழா இருக்கும் என தகவல் துறை மந்திரி ஆரிப் நஜாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்