முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரபணு மாற்ற கத்தரிக்காய் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,மே.- 1 - மரபணு மாற்ற கத்தரிக்காயை விளைவிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிக்க கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை விளைவிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கவும் கூடாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில் இந்த வகை கத்தரிக்காயை கொல்லைப்புற வழியாக அறிமுகப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், சுற்றுச் சூழல் மற்றும் பொதுமக்கள் மீது நலன் கொண்டவர்களை கவலையடைய செய்துள்ளது.
இந்த வகை கத்தரிக்காயால் மக்களுக்கும், வேளாண்மை நிலங்களுக்கும் தீங்கு ஏற்படும் என்று பல தரப்பினரும் குரல் கொடுத்ததால் இதற்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
இது தொடர்பாக முழு ஆராய்ச்சி நடத்தப்பட்டு பொதுமக்களுக்கோ நிலங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் அனுமதிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். பின்னர் ஓராண்டுக்கும் மேலாக எந்த ஆய்வும் நடத்தப்படாத நிலையில் ஏற்கனவே செய்த ஆய்வுகளே போதுமானது என்று கூறி அந்த கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்க மத்திய அரசின் வல்லுனர் குழு முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இயற்கைக்கும் மரபுக்கும் எதிரான இந்த கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது. வேளாண்மை விளைச்சலை அதிகரிக்கவும், பூச்சிக்கொல்லி தாக்குவதை தடுக்கவும் தான் இதை அறிமுகப்படுத்துவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. விளைச்சலை அதிகரிக்க பல்வேறு வழிகள் உள்ளன. வேளாண் நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை தடுக்கலாம். மண் பரிசோதனை செய்து அதற்கேற்ற உரங்களை பரிந்துரைக்கலாம். உலகமே இயற்கை வேளாண்மைக்கு மாறி வரும் நிலையில் இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் அறிமுகப்படுத்தப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்