முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`தலைவா' படப்பாடல் விவகாரம்: கமினரிடம் இயக்குனர் புகார்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.5 - தலைவா படப்பாடல் விவகாரத்தில் நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து, இயக்குநர் விஜய் புகார் மனு அளித்தார்.  அதன் விபரம் வருமாறு:- விஜய், அமலாபால் ஜோடியாக நடிக்கும் படம் `தலைவா'. ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. பாடல்களை விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.

இந்த நிலையில் `தலைவா' படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று இன்டர்நெட்டில் பரவியுள்ளது. யாரோ இப்பாடலை திருடி இணையதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இதுகுறித்து டைரக்டர் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் போலீஸ் கமிஷனரிடம் இன்று நேரில் புகார் செய்தனர்.

பின்னர் டைரக்டர் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:-

'தலைவா' படத்தை ரூ.60 கோடி செலவில் எடுத்துள்ளோம். இதன் பாடல்களை விரைவில் வெளியிட இருந்தோம். இந்த நிலையில் `தலைவா' படத்தில் விஜய் பாடிய `வாங்கண்ணா வணக்கண்ணா' என்ற பாடல் ஆடியோ வெளியாகும் முன்பே இன்டர்நெட்டில் `யுடியுப்ைபிலும் பேஸ்புக்குளிலும் பரவியுள்ளன. இதை வெளியிட்டது யார் என்று தெரிவில்லை. எங்கள் உழைப்பு சுரண்டப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கமிஷனரிடம் புகார் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago