முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் விவகாரம்: முஷாரப் பேட்டி

திங்கட்கிழமை, 9 மே 2011      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி,மே.10 - பாகிஸ்தான் மண்ணில் பின்லேடன் வசித்து வந்ததை உளவு பிரிவு அறிய தவறி விட்டது. இப்போது நான் அதிபராக இருந்தால் இந்த தவறுக்கு நாட்டு மக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருப்பேன் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்தார். 

பிரிட்டனில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறும் போது, அபோட்டாபாத்தில் பின்லேடன் வசித்து வந்தது எங்களுக்கு தெரியவே தெரியாது என்று பாகிஸ்தான் தலைவர்கள் கூறுவது உண்மை என்றே நான் நம்புகிறேன். பின்லேடன் பாகிஸ்தானில் வசிப்பது உறுதியானதும் தாக்குதல் நடத்த முடிவெடுத்தது குறித்து தகவல் தெரிவித்திருந்தால் பின்லேடனை தப்ப விட்டிருப்பர் என்று கருதுவது இரு நாடுகளிடையே நம்பகத்தன்மை இல்லாததையே தெளிவாக்குகிறது. இது போன்ற உறவால் இரு நாடுகளுக்கும் பலனில்லை. இது பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் போருக்கு பின்னடைவையே ஏற்படுத்தும். மேலும் பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க படைகள் உலா வருவதை அனுமதிக்க முடியாது. அந்நாடு தமது படையை பாகிஸ்தான் மண்ணில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்