முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 24 பேர் சாவு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

அபுஜா, செப். 3 - நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை ராணுவ உடையில் சென்று நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் உயிரிழந்தனர். 34 பேரைக் காணவில்லை.

நைஜீரியாவின் வடக்குப் பகுதியை முஸ்லிம் நாடாக மாற்றக் கோரி போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர் தாக்குதலில் ்ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாகாணம் மோங்குனோ நகரில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ராணுவ உடையில் சென்று அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 24 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அண்மையில் நைஜீரிய அதிபர் குட்லக் ஜொனாதன், நாட்டின் வடபகுதியில் உள்ள 3 மாநிலங்களில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார்.

இதையடுத்து, அந்த மாநிலங்களில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறும்போது, போகோ ஹராம் பயங்கரவாதிகளின் முகாம் மீது நாங்கள் நடத்திய தாக்குதலில் அதன் இயக்கத் தலைவர் அபு பக்கர் ஷேகா உயிரிழந்தார் என்று தெரிவித்தனர். எண்ணை வளம் மிகுந்த ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்பட 15 கோடி பேர் வசித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்