முக்கிய செய்திகள்

திஹார் சிறையில் இருக்கும் ராசாவுக்கு 7 மெத்தை விரிப்புகள்

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      இந்தியா
Raja-Jail

 

புது டெல்லி,பிப்.23 - திஹார் சிறையில் இருக்கும் ராசாவுக்கு 7 மெத்தை விரிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறையின் இயக்குனர் நீரஜ்குமார் தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட ராசா நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அல்சர் மற்றும் வயிற்று கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராசாவை சிறையில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து டி.ஆர்.பாலு விசாரித்ததாக தெரிகிறது. 

இதனிடையே ராசாவுக்கு சிறையில் சிறப்பு ஏதும் வழங்கப்படவில்லை என்று சிறை இயக்குனர் நீரஜ்குமார் தெரிவித்தார். மேலும் மற்ற கைதிகளை போலவே ராசா நடத்தப்படுகிறார். படுத்து உறங்க அவருக்கு 7 மெத்தை விரிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதை விரித்து அவர் தரையில்தான் தூங்குகிறார். அவருக்கு சிறையில் முக்கிய நபர்களுக்கான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றாலோ அல்லது அவரை யாரேனும் வெளிநபர்கள் சந்திக்க வேண்டும் என்றாலோ உரிய முறையில் அனுமதி பெற வேண்டும். நாங்கள் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: