முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வு முடிவு அவரச வெளியீட்டால் மாணவ-மாணவிகள் அவதி

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

ஈரோடு,மே.11 - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தி.மு.க. அரசு செய்த குளறுபடியால் ஈரோட்டில் 3 மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். முதலில் மே மாதம் 14 ம் தேதி பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வித் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தேர்வு முடிவுகள் மே மாதம் 9 ம் தேதியே வெளியிடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து நேற்று அவசர அவசரமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் ஈரோட்டில் திண்டல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி திவ்யா, சமஸ்கிருதம் தேர்வில் ஆப்சென்ட் என்று வெளியிடப்பட்டிருந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திவ்யா மயங்கி விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதே போல் அந்த பள்ளியை சேர்ந்த பிரியங்கா என்ற மாணவிக்கும் மார்க் இல்லாமல் முடிவுகள் வந்துள்ளது. அவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இதே போல் அதே பள்ளியை சேர்ந்த கல்பேஸ் என்ற மாணவனுக்கு ஒரு பாடத்தில் 41 மதிப்பெண்களே பதிவாகி உள்ளது. அதே சமயத்தில் மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பதிவாகி உள்ளது. இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், அரசு அரக்கப்பறக்க தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாணவ, மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற நிலை வரக்கூடாது. இதனால் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் மிகவும் பாதிக்கிறது என்றனர். பள்ளி முதல்வர் கிருஷ்ணவேணி கூறுகையில், தேர்வு முடிவுகளை வைத்துத்தான் மாணவர்கள் மேல் படிப்புக்கு முயற்சிக்கிறார்கள். இப்படி தேர்வு முடிவு குளறுபடியாக இருந்தால் மாணவர்களின் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்படும். அவர்களின் எதிர்காலத்தை கருதி இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்