முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாநாடு: ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, செப். 25 - திருச்சியில் பா.ஜ.க. சார்பில் நாளை 26 ம் தேதி நடைபெறவுள்ள இளந்தாமரை மாநாட்டை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாரதீய ஜனதா கட்சி சார்பில் நாளை 26 ம் தேதி திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் இளந்தாமரை மாநாடு நடைபெறுகிறது. பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அப்பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்இக், எஸ்.டி.பி.ஐ. தல்ஹீத் ஜமாத் உள்ளிட்ட பல அமைப்புகள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றி ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்கு குஜராத் மாநில உளவுப் பிரிவு ஐ.ஜி. தலைமையில் அதிகாரிகள் திருச்சி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony