முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வியை மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்: ஜனாதிபதி

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, செப்.26 - மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வியை நாட்டின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசினார். 

புதுவை பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை வந்தார். 

புதுவை விமான நிலையத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் விரேந்திர கட்டாரியா, முதல்வர் ரங்கசாமி, கண்ணன் எம்.பி. மற்றும் தலைமை செயலாளர் சேட்டன் சாங்கி, போலீஸ் ஜஜி சுக்லா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். 

பின்னர் அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் புதுவை பல்கலைக்கழகத்திற்கு  ஜனாபதி பிரணாப் முகர்ஜி சென்றார். அவரை பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். 

இதையடுத்து நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

மாணவர்கள் பட்டங்களை பெற்று தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கி உள்ளீர்கள். இனிமேல் மாணவர்கள் தங்கள் கல்வியை வாழ்க்கையில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மாணவர்கள் அர்ப்பணிப்பையும், முயற்சியையும் வாழ்க்கை பயணத்திற்கு துணையாக கொண்டால் சரியான பாதைக்கு செல்ல முடியும். 

மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வியை நாட்டின் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளோம். கட்டாய கல்வி தரமான கல்வியாக இருக்க வேண்டும். நான் பொதுச்சேவைக்கு வருவதற்கு முன்பு ஆசிரியராக பணிபுரிந்து உள்ளேன். 

அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் போது மனதில் சந்தேகமும், திருப்தியும் ஏற்படும். அதை நானும் பெற்றுள்ளேன். மாணவர்கள் இங்கு கல்வி கற்றதோடு நின்று விடாமல் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 6-ம் நூற்றாண்டில் இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது பிற உலக நாடுகளுடன் நாம் கல்வியில் போட்டியிட்டோம். 

ஆனால் நாம் இன்று பல வசதிகள் பெற்றிருந்தும் உலக அளவில் தரமான 200 பல்கலைக்கழகங்களில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற முடியவில்லை. இது எனக்கு வேதனையை அளிக்கிறது. புதிராகவும் உள்ளது. 

12-வது ஜந்தாண்டு திட்டத்தில் கல்விக்கென்று அதிக நிதியை ஒதுக்கி உள்ளோம். சமூகத்தில் அறிவியல், தொழில் நுட்பமே ஆதிக்கம செலுத்துகிறது. எனவே ஆராய்ச்சி தரத்தை உயர்த்த வேண்டும். புதிய கண்டு பிடிப்புகள் தினசரி வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி சாலைகளை கிராமபுறங்களிலும் அமைக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வியை கடமையை உணர்ந்து நாட்டின் மேம்பாட்டிற்காக  உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago